வியாழன், செப்டம்பர் 29, 2011

(2) உதவிக்கரம்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்

لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ وَمَا تُنفِقُواْ مِن شَيْءٍ فَإِنَّ اللّهَ بِهِ عَلِيمٌ 92}

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். 3:92

( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)

உதவிக்கரம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .
உதவிக்கரம் நீட்டுகிறார்கள் உங்களது பங்பளிப்பை செலுத்தி விட்டீர்களா ? இதுவரை இல்லையென்றாலும் இன்னும் காலம் கடந்திட வில்லை , அவர்கள் இழந்த இழப்பு நம்மால் ஈடு செய்ய முடியாது என்றாலும் மாளிளையில் வாழ்ந்தவர்களை ஒரு குடிசையிலாவது அமர்த்த முடியும், இறந்து போன உயிர்களை மட்டுமே நம்மால் மீட்டுக் கொடுக்க முடியாதே தவிற நாம் மனது வைத்தால் அவர்களை மீண்டும் சீமாகன்களாக்கிட முடியும்.

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். 3:92

நாம் நமக்காக ஈட்டிய நமக்கு விருப்பமுள்ள பொருள்களை அல்லாஹ் கூறுகிற விதம் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தோமேயானால் அவர்களுடைய துயர் துடைத்து அவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை வழங்கிட முடியும் .

மக்காவிலிருந்து மதீனாவுக்கு உடுத்திய ஒரு உடையுடன் ஹிஜ்ரத் சென்ற முஹாஜிர்களுக்கு இவ்வாறே மதீனத்து அன்சாரிகள் தாங்கள் நேசித்த அனைத்து செல்வங்களிலிருந்தும் பங்கிட்டு வழங்கி அவர்களை சீமான்களாக்கினார்கள் . நடந்து முடிந்த சம்பவங்கள் இன்று மக்களால் பேசப்படும் பழங்கதையாகி விட்டது. மீடியாக்களைப் புரட்டுபவர்கள் சுனாமி பற்றி எதுவும் எழுதப்பட்டிருக்கிறதா ? எனப் பார்வையயிடுவதும் கண்ணில் பட்ட சுனாமி சம்பவத்தைப் படித்ததும் உச் கொட்டுவதோடும் நின்று விடுகிறது. 

மீடியாக்களும் கொஞ்சம், கொஞ்சமாக நடந்து முடிந்த சுனாமி சீற்றத்தை நிருத்திக் கொண்டு ஜெயேந்திரரின் ஜாமீன் பக்கம் தங்கள் மதவெறிப் பார்வையை திருப்பி; புளங்காகிதம் அடைந்து கொண்டது.சுனாமி அலையின் கொந்தளிப்பை நேரில் கண்டவர்கள் அவர்களின் அருகில் ஒதுங்கிய சடலங்களை அப்புறப் படுத்தினார்கள், அவைகளை தத்தமது மத சடங்குகளுடன் இறுதிக் கிரியைகளை செய்தார்கள். சாதி மத பேதமின்றி அனைத்து மனிதர்களும் அழுகிய பூத உடலையும் தங்கள் தோள்களில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். (அல்லாஹ் அவர்களின் மீது ரஹ்மத் செய்வானாக) எஞ்சிய உற்றார் உறவினர்களை இழந்த அனாதைகளை அரவனைத்துச் சென்று அகதிகள் முகாம்களில் அடைத்து உணவு கொடுத்தனர். பம்பரமாக சுழன்று செயலாற்றினர்.

ஓரிரு தினங்களில் அவர்களும் அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டனர். தன்னார்வ தொண்டு நிருவனங்கள் தொடர்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை இன்று வரை செலுத்தி வருகிறது.அனாதை முகாம்களில் தங்கி இருக்கும் உற்றார், உறவினர்களை இழந்தவர்களில் இளம் பிஞ்சுகளும் அடங்குவர், திருமன வயதை எட்டிய பாலகர்களும் அடங்குவர்,அவர்களில் உங்கள் வசதிக்கு தகுந்தவாறு ஒரு குழந்தையை தத்து எடுங்கள், பருவ வயதை அடைந்த ஒரு பெண் பிள்ளையை தத்து எடுத்து உங்கள் வீட்டில் அதிக நாள் தங்க வைக்காமல் தாமதமின்றி அப்பெண்ணுக்கு திருமனம் செய்து அனுப்பி விடுங்கள். அவைகள் உங்களுக்கு சதக்கத்துல் ஜாரியா ( நிரந்தர தர்மம் ) எனும் அந்தஸ்த்தில் உயர்த்தப்படும் அவர்கள் சந்தோஷமாக வாழும் காலமெல்லாம் அவர்களுடைய மகிழ்ச்சி உங்களுக்கு அடுக்கடுக்கான நன்மைகளை பெருக்கிக் கொண்டே செல்லும் .

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் இவ்வுலகை விட்டுப்பிரிந்து விட்டால் உலக ரீதியான எல்லாத் தொடர்புகளும் அறுந்து விடுகின்றன. ஆனால் மூன்று விதமான செயல்கள் மாத்திரம் அவனைப்பின் தொடர்கின்றன. அவைகள் : நீடித்த தர்மங்கள் (மக்கள் காலங்காலமாக பயன்பெரும் பொருட்டு அவன் செய்து விட்டுச்சென்ற தர்ம காரியங்கள்.) , பயன் அளிக்கக் கூடிய கல்வி, அவருக்காக துஆ செய்யக் கூடிய நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரழி ) நூல்கள் : முஸ்லிம், மிஷ்காத்

நீங்கள் வெளி நாட்டில் வாழக் கூடியவர்களாக இருந்தால் உங்கள் வீட்டுக்கு தகவல் அனுப்பி அதிகம் பாதிக்கப் பட்ட சென்னை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று சுனாமி நிவாராண அகதிகள் முகாம்களில் ஒருவரை தத்து எடுத்து வரச் சொல்லுங்கள்.நாம் தத்து எடுத்துக் கொள்ளச் சொல்வது ஓரளவு வசதி படைத்தவர்களையாகும், உங்களிடத்தில் திருமன வயதை எட்டிய பிள்ளைகள் இருந்தால், அல்லது வளர்த்து ஆளாக்க வேண்டிய சிறு பிராயத்துக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் அதிகம் தேவையுடையோராக இருப்பீர்கள் அவ்வாறாயின் தத்து எடுப்பது உங்களுக்கு சாத்தியப்படாது. ஆனாலும் அந்த அனாதைகளுக்கு நீங்கள் உங்கள் பங்களிப்பை தாராளமாக செய்து விடுங்கள்;.இது நீங்கள் விரும்பினால் கொடுக்கலாம், விருப்பமில்லையென்றால் கொடுக்காமல் இருந்து விடலாம் என்று நினைக்க முடியாது. அவர்களுக்கு கொடுத்து உதவத் தான் வேண்டும் அப்படி செலவு செய்ய மறுப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை, அத்துடன் அவை அழிவுக்கு இட்டுச் செல்லக் கூடியவை என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். 2:195

நாம் விரும்பும் பொருளை தர்மம் செய்தால் குறைந்து விடுவதாக நம்மில் பெரும்பாலோர் முடிவு செய்கின்றனர் அதுவும் தவறு மாறாக அவைகள் நமக்கு இரட்டிப்பாக மீண்டும் கிடைப்பவைகளாகும்.

உம்மு சல்மா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தான தர்மங்கள் செய்வதினால் செல்வம் குறைந்து போய் விடுவதில்லை. கொடுமை மற்றும் அநியாயமான செயல்களை மன்னிப்பவரின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகப்படுத்தவே செய்கின்றான். யாசகத்தின் வாசலைத் திறந்து விடுகின்றவனின் மீது அல்லாஹ் பற்றாக்குறையின் வாசலையே மூடி விடுகின்றான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அல் தப்ரானி

மேற்கானும் நபிமொழிப் படி அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் உங்கள் பொருளாதாரம் ஒருக்காலும் குன்றி விடாது. மாறாக அவைகள் மென்மேலும் உங்களின் பொருளாதாரத்தை விரிவடைச் செய்யும் என்பதை யாசகத்தின் வாசலைத் திறந்து விடுகின்றவனின் மீது அல்லாஹ் பற்றாக்குறையின் வாசலையே திறந்து விடுகின்றான் என அண்ணலார் திருவாய் மலர்ந்தருளியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆகவே உங்கள் யாசகத்தின் வாசல்களை அந்த திக்கற்றோர்களுக்கு திறந்து விடுங்கள்.

அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும்; பாடுபடுபவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர் போன்றவராவார்; அவர் சடவடையாமல் தொடர்ந்து நோன்பு நோற்பவர் நின்று வணங்குபவர் போன்றவர் போலாவார். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் . . . அன்புடன் அதிரை ஏ.எம். பாரூக்