வியாழன், செப்டம்பர் 29, 2011

(4) நூஹ் (அலை) அவர்கள்.




وَقِيلَ بُعْداً لِّلْقَوْمِ الظَّالِمِينَ {44

''அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.11:44.



(  2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை )


நூஹ் (அலை) அவர்கள்
நூஹ்(அலை) காலத்து மக்கள் நீண்ட வயதையுடையவர்களாவார்கள். ஒவ்வொரு சமுதாயத்து மக்களுக்கும் ஒரு சிறப்பை அல்லாஹ் வழங்கினான். நூஹ்(அலை) காலத்து மக்களுக்கு அல்லாஹ் நீண்ட நெடிய ஆயுளை வழங்கினான் நூற்றுக்கணக்கான வயதையுடையவர்களாக வாழ்ந்தார்கள். உலகின்  சுகமான வாழ்க்கை அவர்களை மதிமயங்கச் செய்து ஏகஇறைவனை மறுக்கச் செய்தது, அவனின் தூதுத்துவத்தைப் பொய்ப்பிக்கத் தூண்டியது மறுமையயையும் மறுக்கச் செய்தது.


இதனால் தன்னுடன் வாழ்ந்த இறைத் தூதரை வெறுக்கச் செய்து அவர்களை விரட்டி அடிக்கும் நிலைக்கு தள்ளச் செய்ததால் ஒரு நாள் இறைத் தூதர் நூஹ்(அலை) அவர்களே இறைவனிடம் இவர்கள் அனைவரையும் ஒன்று விடாமல் அழித்துவிடு இறைவா ! என்று பிரார்த்திக்கும் அளவுக்கு அவர்களின்  மீதான நெருக்குதல் எல்லை மீறிச் சென்று விட்டது. இதனால் அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்திக்கலானார்கள்.

''நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!'' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். 54:10.

இதன் பின்னர் அந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் இறங்கத் தொடங்கியது. அவர்களின் அழிவுக்காக வெள்ளப்பிரளயம் ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்

வெள்ளப்பிரளயத்தை அனுப்பி அநியாயக்கார மக்களை அழிக்கப்போவதை நூஹ்(அலை) அவர்க அல்லாஹ் அறிவித்து விடுகிறான்,

நூஹ்(அலை) அவர்க அல்லாஹ்விடமிருந்து பேரழிவு வர இருக்கிறது என அம்மக்களிடம் இறுதி எச்சரிக்கையும் செய்து விடுகிறார்கள்.

நபியையும், நம்பிக்கை கொண்ட மக்களையும் வெள்ளப்பிரளயத்திலிருந்து காப்பதற்காக மிகப் பெரும் கப்பலைக் கட்டுவதற்கு நபிக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப மிகப் பெரியகப்பலை நூஹ்(அலை) அவர்கள் கட்டத்தொடங்குகிறார்கள். அவ்வழியே போக வரக்கூடிய மக்கள் அதைக் கண்டு பரிசகிக்கத் தொடங்கினர்,

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். ''நீங்கள் எங்களைக் கேரி செய்தால் நீங்கள் கேரி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்..11:38

இச்சமுதாயம் அழிக்கப்பட்டு வேறொரு சமுதாயம் உருவாக்கப்படுவதற்காக அணைத்து உயிரிணங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடிகளையும், நம்பிக்கையாளர்களையும், நபியின் குடும்பத்தினரையும் கப்பலில் ஏற்றிக்கொள்ளும் படி இறைவன் நபிக்கு உத்தவிடுகிறான்.

 . . . ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, . . .

நபியின் மகன் மட்டும் மறுத்து ஓரமாக நிற்பதைக கண்ட நபி தனது மகனையும் ஏறிக்கொள்ளச் சொல்கின்றார்கள். ஆனாலும் மகன் மறுத்துவிடுகிறான்.

இதற்கிடையே இறைவன் வானத்திற்கு மழைப்பொழியவும், பூமிக்கு நீரூற்றுகளை பொஙகச்செய்யவும் உத்தரவிடுகிறான்.

வானத்திலிருந்து மழையும், நிலத்துக்கடியிலிருந்து நீரும் கொப்பளிக்கத் தொடங்குகிறது கப்பல் மிதந்து புறப்பட ஆயத்தமாகும் பொழுது அதிலிருந்து கிளம்பிய அலை ஒன்று நபியின் மகனை அவரது கண்முன்னே தூக்கி வீசுகிறது.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி ''அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!'' என்று நூஹ் கூறினார்.

''ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். 11:42,43,
 
மகன் அடித்துச் செல்வதைக் கண்ட நபி இறைவனிடம் கீழ்காணுமாறுக் கூறுகிறார்கள்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். ''என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார். 11:45
 
இதை செவியுற்ற அல்லாஹ் நபியின் மீது கோபம் கொண்டு கீழ்காணுமாறுக் கூறுகிறான்.

''நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான். 11:46.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவ விஷயம் யாதெனில் நபியின் மகன் இறை நிராகரிப்பில் இருந்ததுடன் அல்லாமல்  அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய  ஒழுக்கக் கேடான செயல்களில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான் அதனால் நபியின் பெற்ற மகனாக இருந்தும் அவனை அவரது குடும்பததைச் சார்ந்தவனல்ல என்று அல்லாஹ் கூறி விடுகிறான்.  

சீர்திருத்தம் செய்ய வந்த நபியின் மகனே இப்படி என்றால் வெளியில் உள்ளவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் ?

பூமியிலிருந்து எண்ணற்ற ஊற்றுக்கண்கள் உருவாகி அதன்மூலம் வெள்ளம் பீறிட்டுப் கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடியது பூமியின் நீருற்றுக்கள் அல்லாஹ்வின் கட்டளையாகிய ''பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! எனும் உத்தரவு வரும் வரை பொங்கிப் பீறிட்டு நகரம் முழுவதையும் கடல் போல் ஆக்கிக் விட்டது.

ஒரு வழியாக நிராகரிப்போர் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டப் பின் மழைக்கும், நீரூற்றுக்கும் சீற்றத்தை நிருத்திக் கொள்ளும்படி இறைவன் உத்தரவிட்டான்.

''பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ''அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.11:42,43,44.

மேற் கூறப்பட்ட வெள்ளப்பிரளயம் என்பது இன்று நேற்று நடந்ததல்ல மாறாக நூஹ் (அலை) காலம் என்பது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கடுத்த சமுதாயமாகும், அது மட்டுமல்ல அல்லாஹ்வுடைய இறைச்செய்தியைப் பெற்ற இரண்டாம் சமுதாயமுமாகும்.

மேற் கூறப்பட்ட வெள்ளப் பிரளயம் எப்பொழுதோ நடந்த ஓர் சம்பவம் என்பதால் மக்களால் மறக்கப்படும், அல்லது பிற்கால வழித் தோன்றல்களால் மறுக்கப்படும் அதனால் அந்த கப்பலை அழியாமல் அப்படியே விட்டு வைத்து அந்நிகழ்வுக்கு அல்லாஹ் அதை சாட்சியாக்கினான் அந்நிகழ்வுக்கு திருக்குர்ஆனின் கூற்றும், அந்த கப்பலுமே அழிக்க முடியாத சாட்சிகளாகும்.

அக்கப்பல் இன்று துருக்கி குழுவினரால் ரஷ்யாவின் ஜூதி மலைத்தொடரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

29:13. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.

29:14. அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூ­லி
.

29:15. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா?222
 

அதனால் அந்த வெள்ளப் பிரளயத்தை இயற்கையின் சீற்றம் என சாதாரணமாக நினைத்திட முடியாது. மேலும் அந்த வெள்ளப் பிரளயம் திடீரெனத் தோன்றியவை அல்ல ! திடீரெனத் தோன்றி தாக்கினால் அதை இயற்கையின் சீற்றம் எனக் கூறிடலாம். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கீழ்காணுமாறு அறிவித்து விட்டுச் செய்கிறான்.

தொடக்கத்தில் கொட்டும் மழையைக்கொண்டு வானங்களின் வாயில்களைத்திறந்து விட்டோம், பூமியின்  ஊற்றுகளை பொங்க வைத்தோம், என்று 55:11 வது வசனத்திலும் இறுதியில் ''பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்'' என்று 11:44 வது வசனத்திலும் இறைவன் கூறுவதால். அல்லாஹ்வின் வேதத்தையும் நபியையும் பொய்யாக்கியதுடன் பகிரங்கமாக ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு தொடர்ந்து அட்டூழியங்கள் நிகழ்த்தி வந்தமையால் அநியாயக்கார மக்களை அழிக்க அல்லாஹ்வே அந்தப்பேரழிவை ( வெள்ளப் பிரளயத்தை  ) ஏற்படுத்தினான் என்பதை திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து குர்ஆனிய சமுதாயமாகிய நாம் அதை ஏற்று விளங்கிக் கொண்டுத் திருந்தி அல்லாஹ்வை பயந்து வாழ கடமைப் பட்டுள்ளோம்..

நீண்ட நெடிய 950 வருடங்களுக்கு மேல் பூமியில் அரசோட்சிய பெரும் தொகையிலான மக்கள் அடங்கிய பெரும் பிரதேசத்தை அழித்தொழித்து தரை மட்டமாக்கிய அவ்வெள்ளப் பிரளயப் பேரழிவு இயற்கையின் சீற்றமல்ல! மாறாக இறைவனின் கோபம் தான் என விளங்கிக் கொள்ளலாம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்....


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்