வியாழன், செப்டம்பர் 29, 2011

(1) சுனாமி பேரழிவு.


يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ {6} تَتْبَعُهَا الرَّادِفَةُ {7} قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ {8} أَبْصَارُهَا خَاشِعَةٌ {9}

அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது (ஸþர் ஊதுதல்) நிகழும் நாள்! அடுத்தது, அதைத் தொடர்ந்து வரும்! அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும். அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். 79:6, 9

சுனாமி பேரழிவு.

( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)

இலங்கையில் பூகம்பத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டுகிறது. கடற்கரையில் குவியல் குவியலாக பிணங்கள் ஒதுங்குகின்றன.

இந்தோனேஷியா பூகம்ப சாவு 80 ஆயிரம் இருக்கும் என்று விமானத்தில் பறந்து பார்த்த துணை அதிபர் கூறினார். அங்கு ஒரு நகரமே அழிந்து பிணங்களை புதைக்க ஆளில்லை.
அந்தமானில் 55 முறை விடிய விடிய தொடர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. 10 ஆயிரம் மக்கள் மலை உச்சியில் தவிக்கிறார்கள். கடந்த ஞாயற்றுக்கிழமை ஏற்பட்ட பூமி அதிர்ச்சி உலக வரை படத்தையே மாற்றியது. பல தீவுகள் 20 மீட்டர் தூரம் இடம் பெயர்ந்தன. பூமி அதிர்ச்சி ஏற்பட்ட போது பூமி உருண்டை தனது சுற்றுப் பாதையில் தள்ளாடியது என்று அமெரிக்க விஞ்ஞானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இனைய தளத்திலிருந்து தினகரன் செய்தி மடல்.

அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது (ஸþர் ஊதுதல்) நிகழும் நாள்! அடுத்தது, அதைத் தொடர்ந்து வரும்! அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும். அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். 79:6, 9

அல்லாஹ்வின் சோதனை கடலுக்கடியில் நிலநடுக்கம் மூலம் ஏற்பட்டதை அறிந்தோம். நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? அல்லாஹ் ஏன் இப்படி செய்தான்? இது சரி தானா ? என்பது போன்று சிந்திக்கக் கூடாது இது அல்லாஹ்வுடைய வல்லமைகளில் ஒன்றாகும்


கத்தருல்லாஹூ வமா ஷாஅ ஃபஅல அல்லாஹ் நிர்ணயித்து விட்டான். இன்னும் அவன் நாடியதைச்செய்து விட்டான், நூல் - முஸ்லிம் , 205.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்.

பொருள்: ஒவ்வொரு நிலையிலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனக்கூற வேண்டும்-நூல் ஹாகிம் 1, 499

அல்லாஹ் நாடி விட்டான் நடந்து விட்டது அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் எனக் கூறி விட்டு நாளை நமக்கும் இது போன்று நடக்கலாம் என்பதை மட்டும் ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய ஆக்கப் பூர்வமானப் பணிகளாகிய மனிதாபிமானம் மிக்க உதவிப் பணிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த இக்கட்டான நேரத்தில் முஃமின்களுக்கு அழகானதாக இருக்கும்.
நமது சகோதர, சகோதரிகள் இதில் பல்லாயிரக் கணக்கனக்கானோர் மண்னோடு மண்ணாக கடலுக்கடியில் பரிதாபமாக மடிந்து விட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் மண்ணறைகளைக் கடக்கும்போது கீழ்கானுமாறு பிராத்திப்பார்கள்,  நம்மையும் பிரார்த்திக்கும் படிக் கூறினார்கள் .

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி, மினல் முஃமினீன வல்முஸ்லிமீன, வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிகும் லாஹிகூன (வயர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தாஹிரீன) அஸாலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியத்த.

பொருள் : ((விசுவாசிகள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள வீடுகளை உடையோரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களோடு வந்து சேரக்கூடியவர்கள், (நம்மில் முந்தியவர்களுக்கும், நம்மில் பிந்துகிறவர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகத்தைக் கேட்கிறேன்.

என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் துஆ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ். முஸ்லிம் மற்றும் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடைக்குறிக்குள் இருக்கும் வாசகம் அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மண்ணறைகளை ஜியாரத் செய்வதன் மூலம் தனது மரணத்தை நினைவு படுத்தவும், இதன் மூலம் மனிதர்கள் பக்குவப்படுவார்கள் என்பது அண்ணலாரின் முக்கிய நோக்கமாக இருந்தது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்