திங்கள், நவம்பர் 14, 2011

சுனாமியை அடுத்து ஜப்பானின் அனுமின் உலைக் கூடங்களினால் அதிகரிக்கும் ஆபத்துகள்.

உலக பணக்கார நாடுகளின் வரிசையிலும், உலகின் அழகிய நகரங்களின் வரிசையிலும் ஒன்றான ஜப்பானை சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் கூளமும் குப்பையுமாக மாற்றிப்போட்டு உலக பணக்கார நாடுகளிடமிருந்து நிதிஉதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. கடந்த 11ம் தேதி சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு அடித்த சுனாமி அலை, 9 ரிக்டர் ஸ்கேல் வேகத்துக்கு தாக்கிய பூகம்பம்;, அதற்கடுத்தும் இடைவிடாது தாக்கியதால் சுமார் 175 முறை நிலம் பயங்கர அதிர்வுகளை வெளிப்படுத்தியது அதனால் பூமி அச்சிலிருந்து பல அடி தூரம் ஜப்பான் விலகி விட்டதாக ஜப்பான் புவியியல் விஞ்ஞானி சென்சூ சென்னும், அமெரிக்கப் புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹன்ட்டும் கூறுகின்றனர்.


கடந்த இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகாசாகி என்ற இரண்டு நகரங்கள் அமெரிக்க அணுகுண்டுகளால் முழுமையாக துடைத்தெறியப்பட்டது இப்போதைய பூகம்பத்துடன் அதை ஒப்பிடும் பொழுது அதைவிட இதுவே மிகப்பெரிய பேரழிவு என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமான நிலையத்திற்குள் புகுந்த சுனாமி அலை அங்கு நிருத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை உந்தி நகருக்குள் தள்ளியது, நங்கூரம் பாயச்சி நிருத்தப்பட்டிருந்த கப்பல் மற்றும் விசைப்படகுகள் தூக்கி எறியப்பட்டன. எங்குப் பார்த்தாலும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் நொறுங்கிய கணக்கிலடங்காத கார் குவியல்கள், எண்ணிலடங்கா மனித உடல்கள் பூமிக்குள்ளும் கடலுக்குள்ளும் சொறுகியதில் கடல் மட்டும் இன்றுவரை உடல்களை சிறிது சிறிதாக வெளியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. சாலை ஓரங்களிலும் கட்டிடங்களின் இடிபாடுகளிலுமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 17 ஆயிரத்தைத் தாண்டியதாக கூறுகின்றனர். உயிர் பிழைத்தோரில் மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்தும், 60 லட்சம் பேர் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றியும் தவிக்கின்றனர்.


ஜப்பானில் ஏற்பட்டுள்ளப் பேரழிவுக்கும், எண்ணற்ற மனித உயிர்களின் பலிகளுக்கும் திடீரெனத் தோன்றிய சுனாமியும், பூகம்பமும் மட்டும் காரணம் அல்ல, மாறாக அங்கு தேவைக்கு அதிகமாக நிறுவப்பட்டுள்ள அணுமின் உலைக்கூடங்கள் வெடித்து சிதறியதே முக்கியக் காரணமாகும். தலைநகர் டோக்யோவிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்ற டாயிச்சி நகரின் முதல் பிரிவு அணு உலையின் சுற்றுச்சுவர் மற்றும் மேல்மட்டத்தை குளிர்விக்கும் தானியங்கி குளிர்விப்பான்களை 9 ரிக்டர் வேகத்தில் தாக்கிய பூகம்பம் செயலிழக்கச் செய்து விட்டன. 

ஜப்பானிய அணுசக்தி நிபுணர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு அணுஉலையை குளிர்விக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் பலனளிக்காமல் போகவே இறுதியில் கடல்நீரை போரிக் அமிலத்துடன் அணுஉலையின் குளிர்விப்பான் பகுதிகளுக்கு நேராக அனுப்பியும் அதுவும் பயன் தராமல் அடுத்த நாள் சனிக்கிழமை பயங்கர சப்தத்துடன் வெடித்து மணிக்கு 882 மைக்ரோ சீவரட் அணுகதிர் வீச்சுப் பரவி கடுமையான பாதிப்பை நகரத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் அடுத்தடுத்துள்ள அணுஉலைகளை காக்கும் பணியில் இறங்குவதற்காக அமெரிக்கா முதல் உலக நாடுகளில் உள்ள அணுசக்தி விஞ்ஞானிகளின் பட்டாளமே ஜப்பானை நோக்கிப் படை எடுத்துச்சென்றும் அவர்கள் கணட் முன்னே வரிசையாக நான்கு அணுஉலைகள் வெடித்து சிதறியது. 

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் குடி அமர்த்துவதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல் படை மற்றும் விமானப் படையினர் மூன்றாவதுப் பிரிவு அணுஉலை வெடித்து சிதறி வெளிப்பட்ட கதிர்வீச்சுகளுக்கு பயந்து மீட்புப் பணியை நிருத்தி விட்டனர் இது தான் அமெரிக்கா(?). ஜப்பானியர்களே உயிரைப் பணயம் வைத்து இன்றுவரை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு அணுஉலைகள் வரிசையாக வெடித்து அணுக்கதிர்வீச்சுகள் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிக் கொண்டிருந்ததால் அவசர நிலைப்பிரகடனம் செய்தது ஜப்பானிய அரசு. இந்த கதிர்வீச்சுனால் டைராய்டு புற்றுநோய் வராமல் தடுக்க ஐயோடின் சத்துப்பொருள் வழங்க  ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

கடந்த 11ம் தேதியிலிருந்து உண்ணுவதற்கு, உறங்குவதற்கு வழி இல்லாமல் மின்சாரம் தடுக்கப்பட்டு, தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டு தவிக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு முதலில் உணவும் நீரும் கொடுத்து உயிர் காப்பார்களா ? அல்லது சத்துணவு கொடுத்து நோயைத் தடுப்பார்களா ? ஆறுதலுக்காக அறிவிக்கத்தான் முடியுமேத் தவிற, செயல்படுத்தும் நிலையில் அவர்கள் இப்பொழுது இல்லை. இதை விடக்கொடுமை இந்த டைராய்டு புற்றுநோயை குழந்தைகளுக்கு தாங்கும் திறன் அறவே இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சுனாமியில் தப்பிய ஏராளமானோர் அணுஉலை கதிர்வீச்சினால் ஏற்படும் கொடிய நோயின் தாக்குதலிலிருந்து தப்புவது கடினம்.

ஜப்பானில் டாயிச்சி மற்றும் புகுஸிமா அணுஉலைகள் வெடித்தது மட்டுமே உலகுக்குத் தெரியும் டாயிச்சி மற்றும் புகுஸிமாத் தவிற இன்னும் ஏராளமான அணுமின் நிலையங்கள் ஜப்பானில் இருப்பதாக ஒருப்புள்ளி விபரம் கூறுகிறது. இத்தனை எதற்கு ? நாங்களும் ஜாம்பவான்கள் என்பதை காட்டுவதற்காக அணுகுண்டுகள் தயாரிக்கும் சக்தி வாய்ந்த அணுஉலைகள் தான் அவைகள் என்பதை உலகறியும் !


சொந்த மக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட அளவுக்கதிகமான அணுஉலைகள் அந்த மக்களுக்கே எதிராக அமைந்து விட்டது. இதை இந்தப் பேராபத்திலிருந்து உயிர் தப்பிய 82 வயதான ஜப்பானிய கெய்ஜூரோ மாட்சுசிமா சி.என்.என் நிருவணத்திற்கு அளித்தப் பேட்டியில் இது ஜப்பானின் மூன்றாவது அணுகுண்டு என்றும் கடந்த அணுகுண்டுகளை பிறர் எங்கள் மீது வீசினர் இந்த அணுகுண்டை நாங்களே எங்கள் மீது வீசிக்கொண்டோம் என்று அணுஉலைகள் வெடித்தேப் பேரழிவை அதிகப்படுத்தியது என்பதை உதாராணமாக கூறுகிறார்.

இந்த ஜப்பான் சுனாமி நிறைய படிப்பினைகளை உலக வல்லரசுகளுக்கு கற்றுத் தருகிறது குறிப்பாக அணுகுண்டுகளை குவித்து வைத்துக்கொண்டு நீயா ? நானா ? என்று மார்தட்டும் வல்லரசுகள் இனிமேலாவது இதைப்பாடமாக எடுத்துக்கொள்ள மாட்டார்களா ? என்று சிற்றரசுகள் எதிர்பார்க்கின்றன.

இந்தளவுக்கு ஏராளமான அணுஉலைகளை நிறுவிய ஜப்பான் இதுவரை அமெரிக்காமற்றும் இஸ்ரேலுக்கு அஞ்சியே தனது செயல்பாடுகளை அமைத்திருந்தது என்பது கூடுதல் தகவல். ஈரான் அணுசக்தி ஆய்வுக்குட்பட்ட தகவலறிந்ததும் இத்தனை அணுஉலைகளை வைத்திருக்கும் ஜப்பான் ஈரான் மீது அமெரிக்காவுக்கு ஆதரவாக பொருளாதாத் தடையை அறிவித்தது. வடகொரியா ஏவுகனை சோதனை செய்ததற்காக வடகொரியா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்காவுக்கு ஆதரவாக அறிவித்தது இதே ஜப்பான்.

உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்ப தாராள அனுமதி இருக்கும்பொழுது ஜப்பானில் மட்டும் பயங்கர கெடுபிடி. முஸ்லீமாக மட்டும் வாழலாம் (அதுவும் அரபு நாட்டு வணிக சந்தைக்காக) அதே நேரத்தில் இஸ்லாமிய அடையாளத்துடன் வாழ முடியாது. தாடி வைத்தவர்கள் அரசு வேலைக்கு வரக்கூடாது, புர்கா அணிந்துகொண்டு வீதியில் நடக்கக் கூடாது என்று ஏராளமான கெடுபிடிகள்.  

இனிவரும் காலங்களிலாவது ஜப்பான் முதல் உலகில் உள்ள அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளை குறைக்கும் விதமாக தேவைக்குப் போக மீதமுள்ள அணுஉலைகளை மூடுவதற்கு முன் வந்தால் நல்லது.

ஜெர்மனி தனது நாட்டில் நிறுவப்பட்டுள்ள 7 அணுமின் நிலையங்களை மூன்று மாதங்களுக்கு மட்டும் மூடுவதாக அறிவித்துள்ளது அதுவும் அவைகள் 1980க்கு முன்னர் நிறுவப்பட்டவைகள்.

இந்தியாவும், அமெரிக்காவும் தன்னிடமுள்ள அணுஉலைகளை பாதுகாக்கும் பணியில் பாடு படப் போவதாக அறிவித்துள்ளது மூடுவதற்கு முன்வரவில்லை.

தேவைக்கு அதிகமான அணுஉலைகளை பழையவைகளாக இருந்தாலும் புதிதாக நிறுவப்பட்டிருந்தாலும் உடனடியாக மூடுவதற்கு முன்வரவில்லை என்றால் தொழில்நுட்பத்தில் முன்னேறிய உழைப்பாளி ஜப்பானியர்கள் அணுஉலைகளின் குளிர்விப்பான் பகுதிகளை தங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியாமல் செய்வதறியாது திகைத்து நின்ற நிலை ஏற்படலாம். 

ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். திருக்குர்ஆன் 11: 117

தன் சொந்த நாட்டு மக்களையே சாதி, மத வாரியாக பிரித்து துரோகம் செய்வது, பிற நாட்டின் மீது பகை மூண்டால் மனித உயிர்களை மலிவாகக் கருதி பேரழிவு ஆயுதங்களால் தாக்குவதுப் போன்ற கொடும் செயல்களிலிருந்து தன்னை சீர்திருத்திக் கொள்ளாத எந்த ஊரையும் அல்லாஹ்வின் கோபம் விட்டுவைக்காது.

திடீரென ஏற்பட்ட சுனாமி வீடியோவில் பதிவானவை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்