செவ்வாய், செப்டம்பர் 27, 2011

(8) ஷூஐபு நபி(அலை) அவர்கள்



وَقَالَ الْمَلأُ الَّذِينَ كَفَرُواْ مِن قَوْمِهِ لَئِنِ اتَّبَعْتُمْ شُعَيْباً إِنَّكُمْ إِذاً لَّخَاسِرُونَ

அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), ''நீங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்'' என்று கூறினார். 7:90

 ( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)
ஷூஐபு நபி(அலை) அவர்கள்.


ஷூஐப் நபி (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் மீது அல்லாஹ்வின் கோபம் இறங்கி எவ்வாறு அவர்கள் அழிந்தொழிந்து போனார்கள் என்று பார்ப்போம் ஒவ்வொரு சமுதாயத்து மக்களிடமும் தோன்றிய நபிமார்களும் தனது சமுதாயத்து மக்களிடம் தங்களுடைய தூதுத்துவத்தை எடுத்துச் சொல்லி மக்களிடத்தில் நிலவியிருந்த தீமைகளை தடுத்ததைதைப் பார்த்தோம் ஷூஐபு (அலை) அவர்கள் தங்களது சமூகத்தார்களிடம் கண்ட மனிதன் மனிதனுக்கு இழைத்த அநீதிகள் பலதை தடுத்து குரல் கொடுத்தார்கள்.

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார். 7:85

வியாபாரிகளை நோக்கி அறைகூவல் விடுக்கும் இவ்வசனத்தை முஸ்லீம் சமுதாயம் விளங்கிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளது, இந்த விஷயத்தை பொறுத்த வரை மற்ற சமுதாயத்தவர்களுக்கு இணையாக, அல்லது அவர்களுக்கு ஒரு படி மேலே சென்று நமது சமுதாயத்தவர்கள் இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்கின்றார்கள் என்றால் கண்டிப்பாக மிகையாகாது.

இன்று சென்னை நகரங்களின் அன்றாட நெருக்கடி பஜார்களில் சென்று பார்த்தால் நம்மவர்கள் செய்யும் வியாபாரம் மேற்கூறும் அல்லாஹ்வின் வசனத்திற்கு நேர் மாறாக நடப்பது கண்கூடான காட்சியாக இருக்கும்.

அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக்கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்.

மேற்கானும் இறைக் கட்டளைக்கொப்ப வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அப்படி வியாபாரம் செய்பவரே முஸ்லீமாக இருக்க முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்'' என்று கூறினார். 7:85

அப்படி நடந்து கொள்ள வரும்பவில்லை என்றால் அவர் முஃமினாக இருக்க முடியாது என்று தான் அர்த்தம்.
குர்ஆன் கூறும் சட்ட திட்டங்களை ஏற்காத பெயரளவில் மட்டும் முஸ்லீமாக வாழ நினைக்கிறவர்களுக்கு ஷூஐபு நபி காலத்தில் ஏற்பட்ட அல்லாஹ்வுடைய வேதனையை எதிர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான் அதில் மாற்றமிருக்காது  ஒவ்வொரு சமுதாய மக்களின் மீது அல்லாஹ்வுடைய அழிவு வருவதற்கு முன்பாக அவர்கள் மீது சோதனைக்காக ஒரு பஞ்சத்தை அல்லாஹ் அனுப்பி அம்மக்களை சோதிப்பான்.

நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. 7:94 .

அவர்களைப் பஞ்சம் பிடித்து உலுக்கும் போது அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள், அதிலும் பலர் நினைவு கூறுவதில்லை, பஞ்சத்திலிருந்து மக்களை மீட்டெடுத்து செல்வ நிலையை வழங்கி அதற்கடுத்தும் அவர்கள் திருந்த வில்லை என்றால் அல்லாஹ் கடும் வேதனையைக் கொடுத்து இறுகப் பிடித்து விடுவான்.

பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்; நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன'' என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம். 7:95.

லூத் (அலை) அவர்கள் காலத்தில் கொடுங்காற்றினால் அநியாயக்கார மக்கள் அழிக்கப்பட்டதும் எஞ்சி இருந்த மக்கள் மிகவும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறு தொகையினராக இருந்தனர். ஆகையால் அம்மக்களை இனப் பெருக்கத்தின் மூலம் அசுர வேகத்தில் பல்கி பெருகச்செய்தான்.

நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக''.. 7:86

அம்மக்கள் பெருந்தொகையான பின் அவர்களுக்குள்ளேயே மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநீதிகள் வரம்பு மீறிக் கொண்டு செல்லத் தொடங்கியது இறுதியில் நபியுடன் ஈமான்கொண்ட முஸ்லீம்களை நிராகரிக்கும் மக்களின் தலைவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இன்றைய சிருபான்மை முஸ்லீம்கள பெரும்பான்மை இறை நிராகரிப்பாளர்களால் அடைந்து வரும் சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் போன்று அவர்களும் அனுபவித்து வந்தனர்.

''மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக''.. 7:86


குஜராத்தில் மனித இனச் சுத்திகரிப்புச் செய்து முடித்தப் பின் நடந்த தேர்தலில் எஞ்சியிருந்த முஸ்லீம்களை மிரட்டி வாக்குகளை அடைந்து வெற்றி பெற்ற மோடி போன்று அன்றும் ஈமான் தாரிகளை இறைநிராகரிப்பாளரின் தலைமைப் பீடம் மிரட்டல் கொடுத்து கருவருத்துக் கொண்டிருந்தது.

 அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), ''நீங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்'' என்று கூறினார். 7:90

மீண்டும் தாய் மதத்திற்கு மீட்டப் போகிறோம் என்று திரிசூலத்துடன் சூளுரைப்பவர்கள் போல் தாய் மதத்திற்கு மாறு, இல்லை என்றால் பாகிஸ்தானுக்கு ஓடு எனக் கூறுவது போல் ஷூஐபு நபியை ஈமான் கொண்ட இறை விசுவாசிகளை பழைய மதத்திற்குத திரும்பும்படியும் அவ்வாறு திரும்ப விரும்பாதவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என்றும் மிரட்டல் விடப்படுகிறது. 

ஏற்கனவே இருந்த மதத்தில் சகோதர சமத்துவம்; பேணப்படாததாலும், அதனுடைய கொள்கை கோட்பாடுகள் பிடிக்காமலும் வெளியேறியவர்கள் எவ்வாறு அதற்குள் மீண்டும் திரும்ப முடியும் என்கிற சிற்றறிவு வேலை செய்யாதவர்களின் மிரட்டல் தொடர்கிறது அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி),

''ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்'' என்று கூறினார்கள் - அதற்கவர், ''நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?'' என்று கேட்டார். 7:88

பொறுமையின் பொக்கிஷமான அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் சகமனிதன் மீது இழைக்கும் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று விட்டதால் அவனுடைய வேதனை அந்த கொடுங்கோலர்கள் மீது பூகம்பமாக இறங்கத் தொடங்குகிறது

. . . .அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர். 7:91

அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தாதீர்கள், எனும் மேற்கானும் திருமறை வசனம் ஷூஐப் நபியை பொய்ப்பித்தவர்களை எச்சரித்துக்கூறியது, அல்லாஹ்வை ஈமான் கொன்டவர்களை அச்சமுதாயம் சொல்லொனாத் துயரங்களை கொடுத்து வாழவிடாமல் துரத்தும் நிலை ஏற்பட்டதும் இறை நிராகரிக்கும் அப்பொய்யர்களின் மீது அல்லாஹ் பூகம்பத்தை ஒரே இரவில் அவர்களை முற்றிலுமாக அழித்து விடுகிறான். இங்கும் பூகம்பத்தை அவனே அவர்களை அழிப்பதற்காகவே அனுப்பியதாகவும் கூறுகிறான்.

குஜராத் கலவரத்திற்குப்பிறகு ஒரு பூகம்பம் ஏற்பட்டது அது ஒரு சாம்பிள் தான் மோடியின் சிறுபான்மை முஸ்லீம்களின் மீதான கொலைவெறித் தாண்டவம் தொடருமானால் மோடிக்கும், மோடியின் ஆதரவாளர்களின் மீது கடுமையான பூகம்பத்தை ஏற்படுத்தி அழிக்கமல் அல்லாஹ் விடமாட்டான்  ஆனால் அதற்கு முஸ்லீம்களின் இயைச்சமும், பிராரத்தனையும் அவசியம் தேவை.

அவர்களை அழித்தொழித்த அந்த பூகம்பம் இயற்கையின் சாதாரண சீற்றம் அல்ல மாறாக அல்லாஹ்வின் கோபத்தின் தெளிவான வெளிப்பாடேயாகும் என்பதை கவனிக்க வேண்டும்))
இன்ஷா அல்லாஹ் தொடரும்....


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்