செவ்வாய், செப்டம்பர் 27, 2011

(6) ஸாலிஹ் (அலை) அவர்கள்


فَأَنجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا وَمَا كَانُواْ مُؤْمِنِينَ

7:72. அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.




( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)


ஸாலிஹ் (அலை) அவர்கள்

அல்லாஹ்வையும், அவனது வேதத்தையும் தொடர்ந்து பொய்ப்பித்த ஆது சமுதாயத்து மக்கள் கொடும் காற்றில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் போதே அதில் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் காப்பாற்றப் பட்டனர்.

அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.7:72.

ஆக இவ்வாறு நிராகரிப்போர் முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டப் பின் எஞ்சியோர் அல்லாஹ்வை வழிபடும் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களிடமும் தலைமுறை  மாற்றம் ஏற்பட்டதும் ஷைத்தான் மிக அழகாக அவனுக்கே உரிய நடையில் லாவகமாக சென்று இலேசாக தட்டத் தொடங்கினான் அவர்களும் அவனுடைய தட்டுதலில் பட படவென விழத் தொடங்கினர்.

அந்த மக்களுக்கும் அவர்களுடைய கோத்திரத்திலிருந்தே ஒரு நபியை ஸாலிஹ் (அலை) அவர்களை தேர்வு செய்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறைச்செய்தியுடன் அனுப்பி வைத்தான்.

 ஸமூது கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை அனுப்பி வைத்தோம். . . 7:73

ஆது சமுதாயத்து மக்களுக்கு அல்லாஹ் உடல் வலிமையைக் கொடுத்தது போல் ஸமூது சமுதாய மக்களுக்கும் உடல் வலிமையைக் கொடுத்திருந்தான் ஏறத்தாழ ஆது சமுதாயத்து மக்கள் போன்றே இவர்களும் இருந்தனர். நூஹ் (அலை) அவர்களுடைய சமுதாயத்து மக்கள் போன்று இடம் விட்டு இடம் பெயர்ந்து வசிக்க வில்லை.

ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட அதேப்பகுதியில் ஸமூது சமுதாய மக்கள் தோற்றுவிக்கப்பட்டதால் உடல் வலிமையும், புத்திக்கூர்மையும் அவர்களுக்கிருந்தது போலவே இவர்களுக்கும் இருந்தது அவர்களைப் போன்றே இவர்களும் வானளாவிய மாளிகைகளைக் கட்டி படாடோபமாக வாழ்ந்தனர்.

''ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!'' (என்று அவர் கூறினார்)..7:74

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட அச்சமுதாயம் ஷைத்தான் பிண்ணிய சதிவலையில் சிக்கி அகப்பெருமைக் காரர்களாகவும், ஆணவக் காரர்களாகவும் மாறி அவனது தூதர் கொண்டு வந்த தூதுத்துவத்தைப் பொய்ப்பித்ததுடன் அவற்றை பகிரங்கமாக நிராகரித்தனர்.

 ''நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்'' என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர். 7:,76

தொடர்ந்து இறைநிராகரிப்பில் வீழ்ந்து தங்களை அழிவுக்கு ஆளாக்கிக் கொண்டனர் ஆனாலும் ஸாலிஹ் நபி(அலை)அவர்கள் தொடர்ந்து அம்மக்களுக்கு நல்லுபதேசம் செய்து கொண்டும், எச்சரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்! .எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).26:149, 152

வரம்பு மீறிய ஷைத்தானின் சிஷ்யர்கள் பூமியில் குழப்பத்தை தவிற அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் ? தொடர்ந்து குழப்பங்களின் மூலமாக சந்தேகத்தை உண்டு பண்ணினர் தனது இறைவனிடமிருந்து அத்தாட்சியை கொண்டு வந்துக் காட்டும் படிக் கோரினர்.

''நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்'' என்று அவர்கள் கூறினர்.. ''நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்) 26:153,4

அதன்படி அல்லாஹ் ஓர் பெண் ஒட்டகத்தை அனுப்பி வைத்தான் அவ்வொட்டகம் அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒட்டகத்தின் மூலம் சாதனைகள் நிகழ்த்துவதற்காக அல்ல மாறாக வரம்பு கடந்த மனிதர்களை சோதிப்பதற்காகவேயாகும். அதனால் இந்த ஒட்டகத்தை சீன்ட வேண்டாம் எனும் கட்டளையுடன் அனுப்பி வைத்தான்.

அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).'' 26:156

அல்லாஹ்வுக்குத் தெரியும் அவர்கள் வரம்பு கடந்து விட்டார்கள் அவர்களுடைய தவனை காலம் முடிவுற்றுக் கொண்டிருக்கிறதென்று அதனாலேயே நபிக்கு அனுப்பிய அத்தாட்சியை அவர்களின் மீது சோதனைப் பொருளாக ஆக்கினான் அவன் எண்ணியபடியே அவர்கள் அச்சோதனையில் தோற்றனர் அல்லாஹ்வின் அந்த அத்தாட்சியை (பெண் ஒட்டகத்தின்) கால் நரம்புகளை அறுத்து துண்டித்து விட்டனர்.

அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர். 26:157

அத்துடன் அவர்கள் விட்டார்களா என்றால் ? அது தான் இல்லை. அத்தாட்சியைக் கேட்டார்கள் அத்தாட்சி கொடுக்கப்பட்டது அத்தாட்சியை அழித்தனர் அத்துடன் நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கையை பொய்ப்பிக்கும் விதமாக அத்தண்டனையை கொண்டு வந்து காட்டும் படி திமிர் தனத்துடன் கூறினர். 

பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். ''ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்'' எனவும் கூறினர்.7:77

ஏற்கனவே அம்மக்களின் அட்டூழியங்களின் மீது கோபம் கொண்டிருந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அத்தாட்சியை அழித்ததன் மூலம் இன்னும் கோபம் கொண்டிருந்த நிலையில் இறைவன் புறத்திலான வேதனைக்கு அவசரப்பட்டனர் இறுதியில் அல்லாஹ் தனது வேதனையை அவர்களுக்கு பூகம்பமாக இறக்கினான்.

உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 7:78.

அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு பெரும் சப்தத்தையே நாம் அனுப்பினோம். உடனே அவர்கள் கூளங்களைப் போல் ஆனார்கள். .54:31


மனித சமுதாயத்திலேயே ஆது, ஸமூது கூட்டத்தாருக்கு அல்லாஹ் மாபெரும் உடல் வலிமையை கொடுத்திருந்தான் மனிதர்களிலேயே அதிகபலம் பொருந்தியவர்களாக அவர்கள் திகழ்ந்தனர். தங்களிடம் இருந்த உடல் வலிமையை உண்ர்ந்த அவர்கள் அல்லாஹ்வை மறுத்து மாபெரும் இருமாப்புடன் நடந்து கொன்டனர்; ஆகையினால் இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். எனவும் பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர். என அல்லாஹ் கூறுகிறான்.

கடும் மழை பொழியும் பொழுது ஏற்படுகிற சாதாரண இடி முழக்கமே நமக்கு பெரும் பீதியைக் கிழப்பி வடுகிறது என்றால் அல்லாஹ் கூறுகிற பெரும் சப்தம் மனிதர்களையும் பேரண்டத்தையும் கிடுகிடச் செய்திருக்கும் என்பதை உணரலாம். அதில் அழிவுக்கு ஆளான மக்கள் நிச்சயமாக அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி (யின் கூளம்) போல் ஆகி இருப்பர் என்பதை இன்று நாம் சுனாமி சீற்றத்தில் சிக்கி மடிந்தவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி (யின் கூளம்) போல் கிடந்ததை ஊடகங்களின் வாயிலாக கண்டோம்.

படிப்பனைகள்: ஸமூது சமுதாய மக்கள் ஸாலிஹ் நபிக் கொண்டு வந்த தூதுத்துவத்தை பொய்ப்பித்து தங்களது மனோ இச்சைப்படி வாழ்ந்து வந்ததுடன் அல்லாஹ்வுடைய அத்தாட்சியை அழித்து வரம்புமீறியதால் ஸமூது சமுதாயத்தை அழித்தொழித்த பூகம்பம் இறைவனின் கோபமேயன்றி இயற்கையின் சீற்றமல்ல என்பதை குர்ஆன் கூறுவதிலிருந்து குர்ஆனிய சமுதாயமாகிய நாம் அதை ஏற்றுக் கொள்வதுடன் அதற்கொப்ப நமது வாழ்க்கையை சீர்படுத்தி அல்லலாஹ்வின் நேர் வழியைப் பெற்றுக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்