வியாழன், செப்டம்பர் 29, 2011

(3) இயற்கையின் சீற்றமா ? இறைவனின் கோபமா ?



أَفَأَمِنتُمْ أَن يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لاَ تَجِدُواْ لَكُمْ وَكِيلاً {68}

17:68. நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள்.
----------------------------------------------------------
( 2006 ல் ஏற்பட்ட சுனாமியின் போது எழுதியக் கட்டுரை)
இயற்கையின் சீற்றமா? இறைவனின் கோபமா?

மனித இனம் படைக்கப்படுவதற்கு முன்பே இப்லீஸ் படைக்கப்பட்டு அவன் எந்நேரமும் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருந்தவனாக இருந்தான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை படைக்கப்படவிருக்கும் தகவலை இறைவன் வானவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தான் அதற்கு சிலக்காரணங்களை எடுத்துக்கூறி மனித இனத்தை படைக்க வேண்டாம என்று வானவர்கள மறுத்தனர்.  
   
2:30. ''பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' '46 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது ''அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். ''நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.

இறைவனின் நாட்டப்படியே ஆதம் (அலை) படைக்கப்பட்டதும் அவர்களுக்கு சுஜூது செய்யச்சொல்லி இப்லீஸூக்கு இறைவன் கட்டளையிட்டான் அதை இப்லீஸ் மறுத்து விட்டான் அதனால் இப்லீஸை இறைவன் தனது சுவனச்சோலையிலிருந்து வெளியேற்றினான். 

7:12. ''நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை ''11 விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். ''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.

7:13. ''இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

சுவனச்சோலையை விட்டு வெளியேறுவதற்கு முன் மறுமை நாள்வரை மனித இனத்தை வழி கெடுக்க அல்லாஹ்விடம் அவகாசம் பெற்றுக்கொண்டு அவ்விடத்திலேயே ஆதம்(அலை) அவர்களையும், ஹவ்வா(அலை) அவர்களையும் தனது சூழ்ச்சி வலையில் விழச்செய்து வழிகெடுக்கும் படலத்தைத் தொடங்கினான். 

7:14. ''அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.

7:15. ''நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

அவனுடைய ஆசை வார்த்தையில் வீழ்ந்த ஆதம்(அலை) ஹவ்வா (அலை) இருவரும் பூமிக்கு இறக்கி விடப்பட்டனர். தங்கள் தவறை உணர்ந்துகொண்டப்பின் தங்கள் இறைவனிடம் இருவரும் பாவமன்னிப்புக் கோரினர். 

7:23. ''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

அவர்கள் தவறை உணர்ந்தனர் பாமன்னிப்புக் கோரினர் அல்லாஹ்வும் அவர்களுடைய தவ்பாவை ஏற்றுக் கெபாண்டான் அதன் பிறகு அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சியில் விழாமல் தங்களை தடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு தோன்றியவர்கள் ஷைத்தான் பிண்ணிய சதிவலையில் தொடர்ந்து வீழ்ந்தனர். ஷைத்தானுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து அவனுடைய வேலையைக் குறைத்து அவனை தங்களுக்கு துனையாக்கிக் கொள்ளும் நிலையைத் தேர்வு செய்துகொண்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிவைத் தேடிக்கொண்டனர்.

தனது படைப்புகளிலேயே சிறந்த படைப்பாகிய மனித சமுதாயம் ஷைத்தானுடைய அடிச்சுவட்டை பின்பற்றி அழிவதைக்கண்டு அவர்களை மீட்டெடுப்பதற்காக அச்சமுதாயத்திலிருந்தே ஒரு மனிதரை தனது தூதராகத் தேர்வு செய்து நலவு எது ? தீயது எது ? என்பதை பிரித்திறிவிப்பதற்காக வேதங்களை அல்லாஹ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

இறைத் தூதர்கள் தன்னைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருந்தால் அவர்கள் கூறுவதை நம்ப மாட்டார்கள் என்பதற்காக ஒவ்வொரு தூதர்களுக்கும் ஒரு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றலையும் சேர்ததே வழங்கினான்.

மூஸா (அலை) காலத்து மககள் மந்திரக் கலையில் கை தேர்ந்தவர்களாக இருந்ததால் மிகப்பெரிய மந்திரவாதியின் சக்தியையும் வீழ்த்தக் கூடிய அளவுக்கு மூஸா(அலை) அவர்களுக்கு ஒரு கம்பின் மூலம் சக்தியை வழங்கினான். அக்கம்பின் மூலம் மிகப் பெரிய அற்புதத்தை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்தார்கள்.

ஈஸா(அலை) காலத்து மக்கள் மருத்துவத் துறையில் கை தேர்ந்தவர்களாக இருந்ததால் குருடர்களை குணமாக்கும் ஆற்றல். இறந்தவர்களை உயிர்பிக்கும் ஆற்றல். ஈஸா(அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.


முஹம்மத்(ஸல்)அவர்களின் காலத்து மக்கள் கவிதை புலமையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். பொதுவாக கவிதை என்றாலே எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழியின் உயர்ந்த நடை எழுத்துக்களால் எழுதப் படுவதே கவிதையாகும். முஹம்மத்(ஸல்)அவர்களுக்கு வழங்கிய திருக்குர்ஆன் முழுக்க முழுக்க உயர்ந்த நடையில் இருந்தது.

அரபி மொழியில் பாண்டித்துவம் பெற்ற பலர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சம காலத்தில் வாழ்ந்தனர். பலர் திருக்குர்ஆனை முஹம்மது (ஸல்) அவர்கள் இயற்றிய கவிதை என்றனர். அவர்களிடம் உங்களால் முடிந்தால் திருக்குர்ஆனில் வருவதுபோல் ஒரு அத்தியாயத்தை அல்லது ஒரு வசனத்தையேனும் உங்கள் கவிதை நடையில் இயற்றிக் காட்டும்படி திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப அறைகூவல் விடுத்தும் அரபுக்கவிஞர்கள் பட்டாளம் முழுவதும் சேர்ந்தும் அதற்கிணையான ஒரு வசனத்தையேனும் இயற்ற முடியவில்லை. அத்துடன் அவர்களிடம் இருந்த மாபெரும் ஆற்றல் முன்னறிவிப்பாகும் பல விஷயங்களை முன்னறிவிப்புச் செய்தார்கள் அவைகள் இன்றுவரை நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்த சமுதாயதத்திற்கு தகுந்தவாறு அவர்களுடைய மொழி பேசக்கூடிய மக்களிலிருந்தே ஒருத்தூதரை தேர்வுசெய்து தூதுச்செய்தியை முஹம்மது(ஸல்) வரை அனுப்பிக்கோண்டே இருந்தான்.

'தமக்கிடையே எச்சரிப்பவர் ஒருவர் (இறைத்தூதர்) வந்து செல்லாத சமுதாயத்தினர் எவருமில்லை' (35:24)

 'ஒவ்வொரு சமுதாயத்தினரிடையேயும் நாம் ஓர் இறைத் தூதரை அனுப்பியிருந்தோம்'  (16:36)

மனித சமுதாயம் விழிப்புணர்வு பெறுவதற்காக தொடர்ந்து நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பிக் கொண்டேயிருந்தான். ஆனாலும் மனித சமுதாயம் அவைகளைப் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மாறாக ஷைத்தானுடன் கைகோர்த்துக் கொண்டு ஏகஇறைவனுக்கு நிகராக பல கடவுள்களை வழிபட்டுக் கொண்டு அட்டூழியங்கள் செய்யத் தொடங்கினர்.

அநியாயங்களும், அக்கிரமங்களும் அளவுக்கதிமாக பெருகிக்கொண்டே சென்றன. அல்லாஹ்வுடைய பொறுமை முடிவுக்கு வந்து கோபம் வெளிப்படத் தொடங்கிற்று.

17:66. உங்கள் இறைவனது அருளை நீங்கள் தேடுவதற்காக அவனே கப்பலை உங்களுக்காகக் கடலில் செலுத்துகிறான். அவன் உங்களிடம் நிகரற்ற அன்புடையோனாவான்.

17:67. கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.

17:68. நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவதைப் பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள்.

17:69. அல்லது மீண்டும் ஒரு தடவை அதில் (கடலில்) உங்களை அனுப்பும் போது, உங்களுக்கு எதிராகப் புயல் காற்றை அனுப்பி நீங்கள் (அவனை) மறுத்ததால் உங்களை மூழ்கடிக்க மாட்டான் என்று அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நமக்கு எதிராக உங்களுக்கு அதில் உதவுபவரைக் காண மாட்டீர்கள்.

அல்லாஹ்வின் கோபம் எவ்வாறு வெளியாயிற்று 
தொடரும். . . .

 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்