திங்கள், நவம்பர் 14, 2011

அமெரிக்க சூறாவளி

فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ

46:24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். ''இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். ''இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)


கட்டுரை எழுதியது  Saturday, August 19, 2006


சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட இருவகையான சீற்றங்கள் மூலம் கனிசமான உயிர் சேதமும், மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டதாக மீடியாக்கள் கூறின அவர்களுடைய விஷயத்தில் மீடியாக்கள் எப்பொழுதுமே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும். ஆனாலும் உலக நாடுகள் அளித்த நன்கொடைகளை ( நிவாரண நிதி ) பெற்றுக்கொண்டதன் மூலம் மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவு ஓரளவுக்கு உண்மை தான் என்பதை அறிந்து கொண்டோம்.

நபிமார்களும், வேதங்களும் வந்து கொண்டிருந்த காலகட்டங்களில் இது போன்றே பல முறைகள் நடந்துள்ளன. இவைகள் நடப்பதற்கு முன்னதாகவே அந்த சமுதாய மக்களிடம் இது போன்று ஒரு அழிவு உங்களிடம் வரவிருக்கிறது ஆகவே திருந்திக் கொள்ளுங்கள் உங்கள் தவறுகளுக்கு இறைவனிடம் வருந்திக் கொள்ளுங்கள் என்று தனது தூதர்கள் மூலம் அல்லாஹ் எச்சரித்து அதை மக்கள் மீறும் போது இது போன்ற சீற்றங்களை ஏவி அவர்களை அழித்து விட்டு அதில் வேறொரு சமுதாயம் உருவாக்கப்பட்டதையும் அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான், அதுமட்டுமல்ல அவ்வாறு இறைவனின் ஏவலில் சீறிய சீற்றங்களில் சிக்கி சிதறுண்ட நகரங்கள் இடிபாடுகளுடன் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறான்.

அவைகள் பொய்யல்ல மாறாக இன்றும் குறிப்பிட்ட அவ்விடங்கள் அல்லாஹ் கூறிய பிரகாரம் அரேபிய பாலைவெளிகளில் வீற்றிருப்பதை நம்மைக்காட்டிலும் அவர்கள் அறிந்தவர்காளாக உள்ளனர்.

முதலில் அமெரிக்காவில் ஏற்பட்ட இறைவனின் சீற்றத்தில் பலியான உயிர்களுக்காக நாம் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உயிர்களின் மீது பரிவு கொள்வது ஒவ்வொரு முஃமினுடைய கடமையாகும். மதம் என்று வரும் பொழுது அதில் மனிதன் மாச்சர்யம் கொண்டாலும், உயிர் என்று வரும் பொழுது அவ்வுயிர் எம்மதத்தைச் சார்ந்ததாக (மனித இனம், மிருக இனம் எதுவாக) இருந்தாலும் அதன் மீது பரிவு கொள்ள வேண்டும்.

ஈரமுள்ள ஈரல் கொண்ட ஒவ்வொரு உயிரிணத்தின் மீதும் கருனை கொள்வது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : அபூ தாவூத்.

இவ்விஷயத்தில் அன்றும், இன்றும் முஸ்லிம்கள் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியதை நாம் பட்டியிலிட்டு எழுத முடியும் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும், அதன் பின் சஹாபாக்கள் காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும். அவர்கள் மற்ற நாடுகளை வெற்றி கொள்ளும்போது அங்குள்ள மனிதர்கள் மீதும், அவர்களின் அசையும். ஆசையாச்சொத்துக்களின் மீதும் எவ்வாறு பரிவுடன் நடந்து கொண்டார்கள் என்பதையும், இதே மற்றவர்களின் யுத்தங்களின் போது சிலுவை யுத்தம் முதல் சமீபத்தில் நடந்த ஆப்கான், ஈராக் யுத்தங்கள் வரை அவர்கள் மனித உயிர்களின் மீது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் இஸ்லாமிய ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.

ஹூது (அலை) அவர்கள் காலத்தில் ஆது சமுதாயத்தவர்கள் மீது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏவி விட்ட கொடுங்காற்றைப் பற்றி ஒரு தலைப்பில் எழுதினோம். அதை இப்பொழுது நினைவு படுத்தினால் நன்றாக இருக்கும். அதுவும், சமீபத்திய அமெரிக்காவில் வீசிய ( ரீட்டா ) எனும் கொடுங்காற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரீட்டாவும் இறைவனின் கோபம் தான் என்பது தெளிவாகும்.

பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம், 46:24.

41:15. ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். ''எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வரிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.

மாட மாளிகைகளையும், சொகுசு பங்களாக்களையும் அழகிய கலை நுட்பத்துடன் வடிவமைத்து இன்றைய அமெரிக்கர்கள் போன்று அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்களுடைய பூமியில் மிகவும் உயரமான இடத்தில் மக்கள் கண்டு வியப்புறும் வகையில் வின்னை முட்டும் நினைவுச் சின்னங்களை அமைத்துக்கொண்டனர். நிரந்தரமாக வாழ்வோம் அல்லது மரணித்தாலும் மரணத்துடன் முடிந்து விட்டது மீண்டும் எழுப்பப் பட மாட்டோம் என்று இன்றைய அமெரிக்கர்கள் போல் அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் அனுபவித்தார்கள்.

''நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா? 26:128. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? 26:129.

தங்களுக்கு கீழுள்ளவர்கள் சிறிய தவறைச் செய்தாலும் குவான்டனாமோ சிறையில் அடைத்து கடும் சித்ரவதை செய்து மகிழ்ந்ததைப்போல் செய்யாத குற்றத்திற்காக ஆப்கனையும், ஈராக்கையும் அடித்து சல்லடையாக்கி மகிழ்ந்த அமெரிக்க டாம்பீக அரசைப்போல் அன்றைய ஆது சமுதாயததவர்கள் செய்து மகிழ்ந்ததாக அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

26:129.நிரந்தரமாக இருப்பதற்காக வரிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?
26:130. நீங்கள் பிடிக்கும் போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.
16:131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் கூற்றுக்களை தொடர்ந்து மறுத்தார்கள் அதனால் அல்லாஹ் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு சாபமிடலானான்

11:60. இவ்வுலகிலும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க! ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஹூதுவின் சமுதாயமான ஆது சமுதாயம் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.

வெகுவிரைவில் அல்லாஹ்விடமிருந்து தங்களுக்கு வரவிருக்கும் பேரழிவை நம்ப மறுத்து அல்லாஹ்விடமிருந்து வர இருக்கும் பேரழிவை வரவழைத்துக் காட்டும் படி நபியவர்களிடம் திமிர் வாதம் பேசினர்.. . .

7:70...நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர்.

ஒரு நாள் மேகம் வானத்தின் வெளிச்ச மண்டலத்தை மூடுகிறது பூமியில் எங்கும் இருள் படலமாகிறது அதைப்பார்த்தும் ஆது கூட்டத்தார் அல்லாஹ் தனது நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கைகள் நினைவுக்கு வர வில்லை. அதை அல்லாஹ்வின் வேதனை வரப்போகிறது என்று உணர வில்லை மாறாக

ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? ,தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில்381 அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? 54:18 லிருந்து 21 வரை.

படிப்பினைகள் : வின்னை முட்டும் கோபுரங்களும், மாட மாளிகைகளும் நினைவுச் சின்னங்களையும். பூமியில் நிர்மானித்தவர்களாகிய தனக்கு கீழுள்ளவர்களை சிறிய குற்றங்களுக்காக சிதரவதை செய்து மகிழ்ந்த மாபெரும் உடல் வலிமைப் பெற்றவர்களாகிய, தன்னைப் போன்ற வலிமை வாய்ந்தவர்கள் பூமியில் உண்டோ ? என மார் தட்டிய பேர் வழிகள் நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து, மண்ணோடு மண்ணாக மறைந்து போனர் . சுப்ஹானல்லாஹ்.

ஆப்கான் அடித்து நொருக்கப்பட்டு மனித உயிர்களைக் கொன்று குவியல், குவியல்களாக குவிக்கப்பட்டு, அதன் வடு ஆருவதற்கு முன் ஈராக்கும் அதே வழியில் சிதைக்கப்பட்டு சதாம் கைது செய்யப்பட்டப்பின் டபிள்யூ புஷ் கீழ்கானுமாறு கூறினார் எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என்று இருமாப்பாய் கர்ஜித்தார்;. மேல்படி அறிக்கையைப் படித்ததும் லிபியாவின் அதிபர் தாமதமின்றி அவரிடம் சரணடைந்ததும் நினைவிருக்கும்.

அன்று ஆது சமுதாயத்தவர்கள் கூறியதற்கும். இன்று இவர்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? அதனால் அவர்களின் மீது ஏவியது போன்ற கொடுங்காற்றை இவர்கள் மீதும் ஏவினான் (இரண்டிற்குமிடையில் உள்ள ஒரு வித்தியாசம் அன்று முழுமையாக அழித்தொழித்தான் இன்று படிப்பினைக்காக விட்டு வைத்துள்ளான் )

அநியாயக்காரன் மீண்டும் வெற்றிப் பெற்று விட்டானே ? என்று அன்று நாம் கவலை அடைந்தோம் ஆனால் இன்று அல்லாஹ்வின் ஏற்பாடு வேறு மாதிரியாக இருந்ததை நாம் அறிய  வில்லை.

இனவெறிப்பிடித்த ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது மகன் டபிள்யூ புஷ்ஷூம் இஸ்லாத்தை தவறான மதம் என்று பிரகடனப் படுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியும் உலக அப்பாவி மக்களை நம்ப வைத்து தங்களது வலிமை வாய்ந்த ரானுவத்தைக் கொண்டு அப்பாவி முஸ்லிம் உயிர்களை வேட்டையாடி கொன்றுக் குவித்தனர். முஸ்லிம் மக்கள் செத்து மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்த புஷ்ஷூம், டபிள்யூ புஷ்ஷூம் கொடுங்கோலர்களாகிய தங்களை மீண்டும் ஆதரித்து வாக்களித்த தங்களது இனத்து மக்கள் இறைவனின் சீற்றத்தில் மூழ்கி மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்திருப்பார்களா ? மாறாக துடி துடித்திருப்பார்கள்.

வல்ல அல்லாஹ் அவரை மீண்டும் அரச பதவியில் அமர்த்தி தான் யார் ? என்பதை தன்னுடைய அதிகாரம் என்னவென்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களுடைய டாம்பீக பேரரசை இலோசான ஒரு உலுக்கு உலுக்கி உலக நாடுகளிடம் அவர்களை பிச்சை எடுக்க வைத்தான்? அதிலும் முக்கிமாக கவனிக்க வேண்டிய விஷயம் அன்றாடம் காய்ச்சி (ஏழை) நாடுகளிடமும் கை நீட்ட வைத்தான்.

அவர் அந்த தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் நிச்சயம் நாம் சந்தோஷப்பட்டிருப்போம் மாற்றமில்லை, ஆனால் அதை விட சந்தோஷம் இப்பொழுது அவர் உலக நாடுகளில் பிச்சை எடுத்ததும். அவர் பதவியிலிலிருக்கும் போதே தனது நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வைத்து உள்ளம் குமுறுவதை அவருக்கு அல்லாஹ் துனியாவில் தண்டனையாக்கியதுடன், மறுமையில் மாபெரும் தண்டனையை சித்தப் படுத்தி வைத்திருப்பான்.

எந்த ஒரு அரசனும் பூமியில் தனது நாடு வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ள முடியாது அல்லாஹ்வின் அர்ஷே நிலையான வல்லரசாகும் என்பதை அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரச் சரிவு நிருபிக்கிறது. பொருளாதாரம் சரிந்து விட்டால் வல்லரசு எனும் டாம்பீகம் மண்ணைக் கவ்வும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் தனது வேதனையை இறக்க நினைத்தால் முதலில் அந்நாட்டின் செல்வத்தைத் துடைத்தெடுத்து வறுமையையும் ? பஞ்சத்தையும் புகுத்துவான் அது அவனுடைய முன்னெச்சரிக்கையாகும் அதிலும் அவர்கள் திருந்த வில்லையென்றால் அவர்களையே துடைத்தெறியக் கூடிய மாபெரும் சீற்றத்தை ஏவுவான்.

7:130. ''படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

7:136. அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடரில் மூழ்கடித்தோம்.

இப்பொழுது அமெரிக்காவில் இலோசான சீற்றத்தினால் ஏற்பட்டப் பஞ்சத்தின் மூலம் அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்றால் குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்ற ஆது சமுதாயத்தவர்களுடைய வரலாறைப் படித்து படிப்பினைப் பெறட்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம். பாரூக்
சுனாமியை அடுத்து ஜப்பானின் அனுமின் உலைக் கூடங்களினால் அதிகரிக்கும் ஆபத்துகள்.

உலக பணக்கார நாடுகளின் வரிசையிலும், உலகின் அழகிய நகரங்களின் வரிசையிலும் ஒன்றான ஜப்பானை சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் கூளமும் குப்பையுமாக மாற்றிப்போட்டு உலக பணக்கார நாடுகளிடமிருந்து நிதிஉதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. கடந்த 11ம் தேதி சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு அடித்த சுனாமி அலை, 9 ரிக்டர் ஸ்கேல் வேகத்துக்கு தாக்கிய பூகம்பம்;, அதற்கடுத்தும் இடைவிடாது தாக்கியதால் சுமார் 175 முறை நிலம் பயங்கர அதிர்வுகளை வெளிப்படுத்தியது அதனால் பூமி அச்சிலிருந்து பல அடி தூரம் ஜப்பான் விலகி விட்டதாக ஜப்பான் புவியியல் விஞ்ஞானி சென்சூ சென்னும், அமெரிக்கப் புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹன்ட்டும் கூறுகின்றனர்.


கடந்த இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகாசாகி என்ற இரண்டு நகரங்கள் அமெரிக்க அணுகுண்டுகளால் முழுமையாக துடைத்தெறியப்பட்டது இப்போதைய பூகம்பத்துடன் அதை ஒப்பிடும் பொழுது அதைவிட இதுவே மிகப்பெரிய பேரழிவு என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமான நிலையத்திற்குள் புகுந்த சுனாமி அலை அங்கு நிருத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை உந்தி நகருக்குள் தள்ளியது, நங்கூரம் பாயச்சி நிருத்தப்பட்டிருந்த கப்பல் மற்றும் விசைப்படகுகள் தூக்கி எறியப்பட்டன. எங்குப் பார்த்தாலும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் நொறுங்கிய கணக்கிலடங்காத கார் குவியல்கள், எண்ணிலடங்கா மனித உடல்கள் பூமிக்குள்ளும் கடலுக்குள்ளும் சொறுகியதில் கடல் மட்டும் இன்றுவரை உடல்களை சிறிது சிறிதாக வெளியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. சாலை ஓரங்களிலும் கட்டிடங்களின் இடிபாடுகளிலுமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 17 ஆயிரத்தைத் தாண்டியதாக கூறுகின்றனர். உயிர் பிழைத்தோரில் மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்தும், 60 லட்சம் பேர் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றியும் தவிக்கின்றனர்.


ஜப்பானில் ஏற்பட்டுள்ளப் பேரழிவுக்கும், எண்ணற்ற மனித உயிர்களின் பலிகளுக்கும் திடீரெனத் தோன்றிய சுனாமியும், பூகம்பமும் மட்டும் காரணம் அல்ல, மாறாக அங்கு தேவைக்கு அதிகமாக நிறுவப்பட்டுள்ள அணுமின் உலைக்கூடங்கள் வெடித்து சிதறியதே முக்கியக் காரணமாகும். தலைநகர் டோக்யோவிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்ற டாயிச்சி நகரின் முதல் பிரிவு அணு உலையின் சுற்றுச்சுவர் மற்றும் மேல்மட்டத்தை குளிர்விக்கும் தானியங்கி குளிர்விப்பான்களை 9 ரிக்டர் வேகத்தில் தாக்கிய பூகம்பம் செயலிழக்கச் செய்து விட்டன. 

ஜப்பானிய அணுசக்தி நிபுணர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு அணுஉலையை குளிர்விக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் பலனளிக்காமல் போகவே இறுதியில் கடல்நீரை போரிக் அமிலத்துடன் அணுஉலையின் குளிர்விப்பான் பகுதிகளுக்கு நேராக அனுப்பியும் அதுவும் பயன் தராமல் அடுத்த நாள் சனிக்கிழமை பயங்கர சப்தத்துடன் வெடித்து மணிக்கு 882 மைக்ரோ சீவரட் அணுகதிர் வீச்சுப் பரவி கடுமையான பாதிப்பை நகரத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் அடுத்தடுத்துள்ள அணுஉலைகளை காக்கும் பணியில் இறங்குவதற்காக அமெரிக்கா முதல் உலக நாடுகளில் உள்ள அணுசக்தி விஞ்ஞானிகளின் பட்டாளமே ஜப்பானை நோக்கிப் படை எடுத்துச்சென்றும் அவர்கள் கணட் முன்னே வரிசையாக நான்கு அணுஉலைகள் வெடித்து சிதறியது. 

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் குடி அமர்த்துவதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல் படை மற்றும் விமானப் படையினர் மூன்றாவதுப் பிரிவு அணுஉலை வெடித்து சிதறி வெளிப்பட்ட கதிர்வீச்சுகளுக்கு பயந்து மீட்புப் பணியை நிருத்தி விட்டனர் இது தான் அமெரிக்கா(?). ஜப்பானியர்களே உயிரைப் பணயம் வைத்து இன்றுவரை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு அணுஉலைகள் வரிசையாக வெடித்து அணுக்கதிர்வீச்சுகள் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிக் கொண்டிருந்ததால் அவசர நிலைப்பிரகடனம் செய்தது ஜப்பானிய அரசு. இந்த கதிர்வீச்சுனால் டைராய்டு புற்றுநோய் வராமல் தடுக்க ஐயோடின் சத்துப்பொருள் வழங்க  ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

கடந்த 11ம் தேதியிலிருந்து உண்ணுவதற்கு, உறங்குவதற்கு வழி இல்லாமல் மின்சாரம் தடுக்கப்பட்டு, தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டு தவிக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு முதலில் உணவும் நீரும் கொடுத்து உயிர் காப்பார்களா ? அல்லது சத்துணவு கொடுத்து நோயைத் தடுப்பார்களா ? ஆறுதலுக்காக அறிவிக்கத்தான் முடியுமேத் தவிற, செயல்படுத்தும் நிலையில் அவர்கள் இப்பொழுது இல்லை. இதை விடக்கொடுமை இந்த டைராய்டு புற்றுநோயை குழந்தைகளுக்கு தாங்கும் திறன் அறவே இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சுனாமியில் தப்பிய ஏராளமானோர் அணுஉலை கதிர்வீச்சினால் ஏற்படும் கொடிய நோயின் தாக்குதலிலிருந்து தப்புவது கடினம்.

ஜப்பானில் டாயிச்சி மற்றும் புகுஸிமா அணுஉலைகள் வெடித்தது மட்டுமே உலகுக்குத் தெரியும் டாயிச்சி மற்றும் புகுஸிமாத் தவிற இன்னும் ஏராளமான அணுமின் நிலையங்கள் ஜப்பானில் இருப்பதாக ஒருப்புள்ளி விபரம் கூறுகிறது. இத்தனை எதற்கு ? நாங்களும் ஜாம்பவான்கள் என்பதை காட்டுவதற்காக அணுகுண்டுகள் தயாரிக்கும் சக்தி வாய்ந்த அணுஉலைகள் தான் அவைகள் என்பதை உலகறியும் !


சொந்த மக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட அளவுக்கதிகமான அணுஉலைகள் அந்த மக்களுக்கே எதிராக அமைந்து விட்டது. இதை இந்தப் பேராபத்திலிருந்து உயிர் தப்பிய 82 வயதான ஜப்பானிய கெய்ஜூரோ மாட்சுசிமா சி.என்.என் நிருவணத்திற்கு அளித்தப் பேட்டியில் இது ஜப்பானின் மூன்றாவது அணுகுண்டு என்றும் கடந்த அணுகுண்டுகளை பிறர் எங்கள் மீது வீசினர் இந்த அணுகுண்டை நாங்களே எங்கள் மீது வீசிக்கொண்டோம் என்று அணுஉலைகள் வெடித்தேப் பேரழிவை அதிகப்படுத்தியது என்பதை உதாராணமாக கூறுகிறார்.

இந்த ஜப்பான் சுனாமி நிறைய படிப்பினைகளை உலக வல்லரசுகளுக்கு கற்றுத் தருகிறது குறிப்பாக அணுகுண்டுகளை குவித்து வைத்துக்கொண்டு நீயா ? நானா ? என்று மார்தட்டும் வல்லரசுகள் இனிமேலாவது இதைப்பாடமாக எடுத்துக்கொள்ள மாட்டார்களா ? என்று சிற்றரசுகள் எதிர்பார்க்கின்றன.

இந்தளவுக்கு ஏராளமான அணுஉலைகளை நிறுவிய ஜப்பான் இதுவரை அமெரிக்காமற்றும் இஸ்ரேலுக்கு அஞ்சியே தனது செயல்பாடுகளை அமைத்திருந்தது என்பது கூடுதல் தகவல். ஈரான் அணுசக்தி ஆய்வுக்குட்பட்ட தகவலறிந்ததும் இத்தனை அணுஉலைகளை வைத்திருக்கும் ஜப்பான் ஈரான் மீது அமெரிக்காவுக்கு ஆதரவாக பொருளாதாத் தடையை அறிவித்தது. வடகொரியா ஏவுகனை சோதனை செய்ததற்காக வடகொரியா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்காவுக்கு ஆதரவாக அறிவித்தது இதே ஜப்பான்.

உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்ப தாராள அனுமதி இருக்கும்பொழுது ஜப்பானில் மட்டும் பயங்கர கெடுபிடி. முஸ்லீமாக மட்டும் வாழலாம் (அதுவும் அரபு நாட்டு வணிக சந்தைக்காக) அதே நேரத்தில் இஸ்லாமிய அடையாளத்துடன் வாழ முடியாது. தாடி வைத்தவர்கள் அரசு வேலைக்கு வரக்கூடாது, புர்கா அணிந்துகொண்டு வீதியில் நடக்கக் கூடாது என்று ஏராளமான கெடுபிடிகள்.  

இனிவரும் காலங்களிலாவது ஜப்பான் முதல் உலகில் உள்ள அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளை குறைக்கும் விதமாக தேவைக்குப் போக மீதமுள்ள அணுஉலைகளை மூடுவதற்கு முன் வந்தால் நல்லது.

ஜெர்மனி தனது நாட்டில் நிறுவப்பட்டுள்ள 7 அணுமின் நிலையங்களை மூன்று மாதங்களுக்கு மட்டும் மூடுவதாக அறிவித்துள்ளது அதுவும் அவைகள் 1980க்கு முன்னர் நிறுவப்பட்டவைகள்.

இந்தியாவும், அமெரிக்காவும் தன்னிடமுள்ள அணுஉலைகளை பாதுகாக்கும் பணியில் பாடு படப் போவதாக அறிவித்துள்ளது மூடுவதற்கு முன்வரவில்லை.

தேவைக்கு அதிகமான அணுஉலைகளை பழையவைகளாக இருந்தாலும் புதிதாக நிறுவப்பட்டிருந்தாலும் உடனடியாக மூடுவதற்கு முன்வரவில்லை என்றால் தொழில்நுட்பத்தில் முன்னேறிய உழைப்பாளி ஜப்பானியர்கள் அணுஉலைகளின் குளிர்விப்பான் பகுதிகளை தங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியாமல் செய்வதறியாது திகைத்து நின்ற நிலை ஏற்படலாம். 

ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். திருக்குர்ஆன் 11: 117

தன் சொந்த நாட்டு மக்களையே சாதி, மத வாரியாக பிரித்து துரோகம் செய்வது, பிற நாட்டின் மீது பகை மூண்டால் மனித உயிர்களை மலிவாகக் கருதி பேரழிவு ஆயுதங்களால் தாக்குவதுப் போன்ற கொடும் செயல்களிலிருந்து தன்னை சீர்திருத்திக் கொள்ளாத எந்த ஊரையும் அல்லாஹ்வின் கோபம் விட்டுவைக்காது.

திடீரென ஏற்பட்ட சுனாமி வீடியோவில் பதிவானவை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

பாகிஸ்தான் பூகம்பம்.. (19-8-206 ல் எழுதியது)

وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُواْ وَجَاءتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُواْ لِيُؤْمِنُواْ
كَذَلِكَ نَجْزِي  الْقَوْمَ الْمُجْرِمِينَ {13

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.  10:13.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நாம்  இதற்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரீனா சீற்றத்தைப் பற்றி எழுதி இருந்தோம் அதற்கு சில சகோதரர்கள் நமக்கு பதில் எழுதி இருந்தார்கள்.


அதில் இப்பொழுது பாகிஸ்தானில் முஸ்லிம் நாட்டில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தைப் பற்றி ஏன் வாய் திறக்க வில்லை ? அதைப் பற்றி ஏன் எழுத வில்லை ? முஸ்லிம் நாடு என்பதற்காகவும் அங்கு மடிந்த மக்கள் முஸ்லிம்கள் என்பதால் எழுதவில்லையா ? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன..

பதில் ! கத்ரீனா சூறாவளி வெறும் கிருஸ்தவ மக்களை மட்டும் தான் துடைத்துக் கொண்டு சென்றதா ? அமெரிக்காவில் முஸ்லிம்கள் வசிக்கவில்லையா ? கத்ரீனா சீற்றத்தில் மடிந்தவர்களில் முஸ்லீம்கள் அடங்கி இருக்க வில்லையா ? என்கின்ற கேள்வியை முதலில் நாம் கேள்வி எழுப்பியவர்கள் மீது வைத்து விட்டு அடுத்து அவர்களது  ஐயப்பாடுகளுக்கு தெளிவு கான்போம் !.

நாம் கத்ரீனா சீற்றத்தைப பற்றி எழுதியவற்றை அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் ஏற்பட்ட சந்தேகம் ஆகும் அது.

நாம் அப்படி குறுகிய கண்ணோட்டத்தில் கத்ரீனா சீற்றத்தைப் பற்றி எழுதி இருந்தோமானால் அதற்கு முன்பு இந்தோனேசிய சுமத்ரா தீவுகளிலிருந்து புறப்பட்டு இலங்கை தீவு தொட்டு இந்தியா, மாலதீவு மற்றும் பல பிரதேசங்களை ஒரு குலுக்கு குலுக்கிய சுனாமி பற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்களை தொடர்ந்து எழுதி இருந்திருக்க மாட்டோம் காரணம் சுனாமியில் மூழ்கி மடிந்தவர்களில் ஏராளமான பேர் முஸ்லிம்களாவர் சுனாமியில் சிக்கி சிதைந்து உருக்குலைந்து போன நகரங்களில் பாதிக்குமேற்பட்டது இஸ்லாமிய  நகரங்களாகும்.

சுனாமி தமிழ்நாட்டில் கிருஸ்தவர்கள் அதிகம் வாழும் வேளாங்கண்ணியையும் ஒரு கைபார்த்தது அத்துடன் அதன் அருகிலுள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாகூரையும் ஒரு பிடி பிடித்தது என்றால் மிகையில்லை.

இதிலிருந்து நீங்கள் சருக்கமாக புரிந்து கொள்வது யாதெனில் ?.
இறைவனுடைய கோபம் ஏற்படும் போது அது சாதி, மத, பேதம் பார்ப்பதில்லை, காரணம் சாதி, மத, பேதம் இறைவன் பார்க்க பார்க்க மாட்டான். சாதி, மதப் பிரிவு இறைவன் உண்டாக்க வில்லை அது மனிதன் உண்டாக்கிக் கொண்டவைகளாகும்.
 .
மனித இனம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை இறைவன் ஒரே ஒரு மார்க்கத்தை (இஸ்லாத்தை) மட்டுமே மனித குலத்தின் மீது கடமையாக்கி அதை தன்னிடத்தில் அங்கீகரித்தும் கொண்டான்.

3: 19. அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

இறைவனால் மனித குலத்துக்கு ஆகுமாக்கப் பட்டவைகளை; இன்ன இன்னவைகள்,

விலக்கப்பட்டவைகள் இன்ன இன்னவைகள் என்று தனது தூதர்கள் மூலம் அறிவித்தான் .

மனிதகுலம் அவைகளைப் புறக்கனிக்கும் போது தனது சுய விருப்பப்படி தனது சரீர சுகத்திற்காக பலவாறான மனிதனே வெட்கி தலைகுணியும் படியான இச்சைகளை தேடிக் கொள்ளும் போது, அத்துடன் நில்லாமல் பலசாலி பலஹீனமானவனின் மீது அத்து மீறும் போது அங்கு இறைவனின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகிறது அவைகள் ஒரு எல்லையை கடக்கும் போது  இறைவனின் கோபம் இறங்குகிறது.

தன்னைப் போன்ற ஒரு மனிதன் தனது அத்தியாவசியத் தேவைகளுக்காக தன்னைத் தேடி வரும் போது அவனுக்கு பிரதிவுபகாரமாக எதையும் எதிர்பாராமல் உதவி செய்வது மனிதாபிமானம்.

ஆனால் மனிதன் அவனின் தேவைகளுக்கேற்றவாறு அவனின் மீது வட்டி எனும் ஒப்பந்தத்தில் சிறிய அளவிலான ஒன்றைக் கொடுத்து விட்டு பெரிய அளவிலான ஒன்றை கைப்பற்றிக் கொண்டு அவனை நிர்க்கதியாக்கி நிர்மூலமாக்கி விட்டு விடுகிறான். சொற்ப கிரயத்திற்கு அடமானம் வைத்தப் பொருள் திரும்பப் பெற முடியாமல் போனதால் அவனுடைய வயிறு பற்றி எறிய ஆரம்பிக்கிறது. அங்கு அல்லாஹ்வுடைய சட்டம் மீறப்படுவதுடன் மனிதன் மனிதனின் மீதும் செலுத்த வேண்டிய மனிதாபிமானம் செத்து விடுவதால் அல்லாஹ்வுடைய கோபம் இறங்கத் தொடங்குகிறது. இது மற்ற நாடுகளில் மட்டும் தான் நடக்கிறதா ? இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடத்தில் நடக்க வில்லையா ? என்பது ஒரு தெளிவு.

வரதட்சனை கொடுமையால் ஏழ்மையான வீடுகளில் திருமனமாகாத கண்ணிப் பெண்களுக்கு வாழ்க்கை வசதி செய்து கொடுக்காமல் தனது பொருளாதாரத்தைக் காட்டி தனது வலையில் விழச்செய்து அவளை நிரந்தர விபச்சாரியாக்கி விட்டு விடுகிறான் மனிதாபிமானம் செலுத்தி அவளுக்கு வாழ்க்கை வசதி செய்து தராததுடன் அவளின் மீது மிருகமாகி விடுகிறான். இங்கு அல்லாஹ்வுடைய கோபம் இறங்குமா ? இறங்காதா ? இது மற்ற நாடுகளில் மட்டும் தான் நடக்கிறதா ? இஸ்லாமிய நாடுகளில் நடக்க வில்லையா ? என்பது மற்றொரு தெளிவு

இறைவன் மனித சமுதாயத்தின் மீது மதுவை தடைசெய்தான் மதுவில் மனிதனுக்கு கிடைக்கும் சில நன்மைகளை விட பலமடங்கு தீமைகள் இருப்பதை சுட்டிக் காட்டினான் .

மனிதன் அதை ஏற்றுக் கொண்டானா ? மதுவை தயாரித்தான் சுவைத்தான் மக்களிடம் அறிமுகம் செய்து விற்பனை செய்தான் ஏராளமான மக்கள் மதுவிற்கு அடிமையாகினர் அதற்கு அடிமையான பல குடும்பங்கள் சீரழிந்தன. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்த்துக்கள் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு அதை உபயோகிப்பவன் மீது அதை விற்பனை செய்பவன் மீது மரண தண்டனை விதியாக்கப்பட்டுள்ளது அவைகளை மற்றவர்கள் மட்டும் தான் செய்கிறார்களா ? முஸ்லிம்கள் செய்யவில்லையா ? என்பது மேலும் ஒரு தெளிவு அவைகளை பெரும்பாலும் அரபு நாடுகளுக்கு கடத்தி வருபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் பாகிஸ்தானிகளாகும் என்பதை நமது அரபு நாட்டு அனுபவத்தின் வாயிலாக கூறிக் கொள்கிறோம்.

மனிதன் மனிதனின் மீது அத்து மீறும்போது மது , மாது , சூது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளை மனிதன் தாராளமாக நிகழ்த்தும்போது அல்லாஹ்வுடைய கோபம் மனித சமுதாயத்தின்மீது இறங்குகிறது தடுக்கப்பட்டவைகள் பாகிஸ்தானில் நடைபெறாமலா இருக்கிறது ? தாராளமாக அவைகள் அங்கு புழக்கத்தில் உள்ளவைகளாகும்.


பாகிஸ்தானில் என்ன வடிகட்டிய இஸ்லாமிய ஆட்சியா நடைபெறுகிறது ? ( சில விஷயங்களில் மட்டும் இஸ்லாமிய சட்டம் பேனப்படுகிறது பலவிஷயங்களில் இஸ்லாமிய சட்டம் பகிரங்கமாக மீறபட்டுவருகிறது ) 
ஆகையால் அங்கு ஏற்பட்டதும் இறைவனின் கோபமேயன்றி வேறில்லை .

ஜார்ஜ புஷ்ஷூம், அவரது மகன் டபுள்யூ புஷ்ஷூம் கத்ரீனா சீற்றத்துடன் விமிர்சிக்கப் பட்டதின் முக்கிய நோக்கம் யாதெனில்.

அவர்கள் சாதி மத பேதம் பார்த்தார்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தினார்கள், இஸ்லாமிய மதத்தை தவறான மதம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.

உஸாமாவால் ஆப்கானில் இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்பட்டதாலும், புத்தர் சிலை தகர்க்கப்பட்டதாலும் சினங்கொண்ட யூதர்கள் புஷ்ஷைத் தூண்டி விட்டார்கள், யூதர்களின் அடிவருடியாகிய புஷ் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் ஆப்கானை சிதைக்க முடிவெடுத்தார். சிறிய மீனை விட்டு  பெரிய மீனைப் பிடிக்கும் திட்டம் ஒன்றை யூதர்களுடன் அமர்ந்து முடிவெடுத்தார்.

அதனடிப்படையில் இரட்டை கோபுரம் அவர்களின் திட்டத்தில் தகர்க்கப்பட்டது, தகர்ப்புக்கு உஸாமா பெயர் சூட்டப்பட்டது அதன் மூலம் உலக மக்களிடமிருந்து அனுதாபம் பெறப்பட்டு அதன் பிறகு ஆப்கானை சிதைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டது.

பாகிஸ்தானை தளமாக பெற்று கர்ணகொடூரமாக ஆப்கானை தாக்கினார்கள். தன் விரலைக் கொண்டு தன் கண்களை குத்திக் கொண்டதைப்போல் இஸ்லாமிய நாட்டை தளமாகப் பெற்று மற்றொரு இஸ்லாமிய நாட்டை தாக்கும் கேவலமான வேலையை செய்தனர்.  

ஈராக்குடைய ரானுவ பலத்தை குறைப்பதற்காகவும், அதன் இயற்கைவளத்தை கொள்ளையடிப்பதற்காகவும் அத்துடன் பக்கத்திலுள்ள இஸ்ரேலுக்கு அச்சுருத்தல் நீங்கி நிம்மதியாக பாலஸ்தீன பூமியை அவர்கள் திருடுவதற்காகவும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருக்கிறதென்ற புருடாவை அவிழ்த்து விட்டு ஈராக்கை சிதைத்தார்கள் .

அதை ஏன் தந்தையும், மகனும் மட்டும் செய்தார்கள் ? கிளின்டனுடைய ஆட்சியில் அவ்வாறான வெறித் தாக்குதல் நடைபெற வில்லை ( அவ்வப்பொழுது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தது )

தந்தையும், மகனும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அமெரிக்க வாழ் யூத பண முதலைகள் பொருளாதார உதவியை ஒரு பிரதிவுபகார அடிப்படையில் தாராளமாக செய்து உதவினார்கள் அதனால் யூதர்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க லட்சோபலட்ச அப்பாவி முஸ்லீம் உயிர்களை காவு கொண்டார்கள் என்பதுவே நினர்சனமான உண்மையாகும் .

அது என்ன ? பிரதிவுபகாரம் ?
  • அகண்ட இஸ்ரேல் உருவாக்குவதற்கு பாலஸ்த்தீன பூமியை தாராளமாக களவாட உதவ வேண்டும்,
  • அவ்வாறு அகண்ட இஸ்ரேல் உருவாகிய பின் தாங்கள் நிம்மதியாக வாழவும், அண்டை அரபு தேசங்களை மிரட்டி தங்களுக்கு அடிபணிய வைக்கவும் இராக் மாபெரும் அச்சுருத்தலாக திகழ்வதால் இராக்கின் வல்லமையை ஒடுக்க வேண்டும், அதன் பெட்ரோல் வளத்தை அச்சுருத்தலின்றி உறிஞ்சி கொள்ள வேண்டும்
  • சமீபத்தில் மாவீரனாக அவர்களுக்கு காட்சியளித்த (நமக்கல்ல) ஷேக் உஸாமாவை ஒழித்துக் கட்டவேண்டும்.
என்கின்ற கோரிக்கையை பிதிவுபகாரமாக அவர்களிடம் வைக்கப்பட்டு அவர்களது காலடியில் கணக்கிலடங்கா கைக்கூலிகள் கொட்டப்பட்டன என்பதுவே மறைக்கப்பட்ட, மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஜார்ஜ புஷ்ஷூம், டபுள்யூ புஷ்ஷூம் தாங்கள் தங்களுடைய பதவி சுகத்துக்காக யூதர்களிடம் சொற்ப கிரயத்துக்கு விலை போனார்கள்.

அதனால் அப்பாவி முஸ்லிம் உயிர்களை கொன்று குவித்தார்கள் அதில் ஆப்கான் மக்கள் ஒரு ரொட்டித் துண்டை பெறமுடியாத ஏழை பரதேசிகளாவர் அவர்கள் மீது ஈவு இறக்கமின்றி குண்டுகளைப் பொழிந்து கூட்டம் கூட்டமாக கொலை செய்தார்கள் .

அமெரிக்கர்களுடைய உயிர் விலைமதிப்பற்றது !!!

எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என்று இறுமாப்பெய்தினார்கள், அவ்வாறு கூறிப் புளங்காகிதம் அடைந்தவர்ளுடைய கண்களுக்கு முன்பாக இறைவனின் கோபச் சீற்றத்தில் அவர்களுடைய விலை மதிப்பற்ற அமெரிக்க உயிர்கள் காற்றிலடித்தும் வெள்ளத்தில் இழுத்தும் சென்ற போது திகைத்துப் போயிருப்பார்கள்.

நமக்கு கணவில் தூதுச் செய்தி அறிவித்து இஸ்லாமிய மக்களை இனச்சுத்திகரிப்பு செய்யச் சொன்னக் கடவுள் என்ன ஆனார் ? எங்கே போனார் ? என்று விழிபிதுங்கி இருப்பார் என்பதை மிகவும் நாசூக்காக சுட்டிக் காட்டியிருந்தோம்.

அவர்கள் அக்கட்டுரையை மிகவும் மேலோட்டமாக நுனிப் புல் மேய்ந்ததால் உண்மையை விளங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

இன்று நாம் பேரழிவு ஏற்படுத்தும் சீற்றங்களுக்கு இயற்கையின் சீற்றம் என்றுப் பெயரிட்டாலும், அவைகள் நிச்சயமாக இறைவனின் கோபத்தினின்றும் வெளியாகுவைகளேயாகும் .

இஸ்லாமியப் பிரதேசத்தில் பேரழிவு சீற்றம் ஏற்படாது என்று கூறுவது அறிவுடமையாகாது, மற்ற தேசங்களை விட இஸ்லாமிய தேசத்தில் தான் அது போன்ற சீற்றங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது காரணம் ஓரிறைவனாகிய ஏகஇறைவனை ஏற்று வழி நடக்க கடமைப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் அவனுடைய கட்டளைகளை பகிரங்கமாக புறக்கனிக்கும் போது அங்கு தான் இறைவனின் கோபம் இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது வேலியே பயிரை மேய்கிறதே என்கிற எண்ணத்தில் அல்லாஹ் அந்த மக்கள் மீது இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கோபம் கொள்வான் என்பதே யதார்த்தம்.

மறுமையில் முஸ்லிம் சமுதாயத்தவர்கள் 73 பிரிவினராக இறைவனின் முன்பு அணி வகுத்து வருவார்கள் அந்த 73 அணியினரில் 72 அணியினர் நரகம் புகுவார்கள், 1 அணியினர் மட்டும் சுவனம் புகுவார்கள் என்பது நபிமொழி நரகம் புகும் 72 அணியினர் உலகில் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக வாழ்ந்தார்கள் என்பதால் நரகத்தில் தாலாட்டப்பட்டுக் கொண்டு இருப்பார்களா ?

வேதனை செய்யப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள் அவ்வாறு அங்கு வேதனைக்குள்ளாக்கப்படுபவர்கள் அவ்வேதனைகளை உலகிலும் கொஞ்சம் சுவைக்கவே செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

இறைவனின் கோபம் மனித சமுதாயத்தில் இறங்கும்போது அவைகள் சாதி, மதம் பார்ப்பதில்லை என்பதே தெளிவு ! அதிலும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது தீயோர்களுக்காக இறங்கும் அந்த சீற்றம் அருகிலுள்ள நல்லறங்களை மட்டுமே செய்து வாழ்ந்து கொண்டிருந்;த மக்களையும் பாதிக்கவேச்செய்யும்.

ஆனால் அந்த இரண்டுப் பிரிவினர்களையும் எழுப்பப்படும் நாளில் நல்லறங்கள் செய்து வாழ்ந்தவர்களுக்கு சுவனச் சோலைகளையும், தீமைகளை மட்டும் செய்து தட்டழிந்து கெட்டுத் திரிந்தவர்களுக்கு நரகவேதனையும் வழங்கப்படுவதாக தங்களது அருமைத் துனைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். 4:1..

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!  7:3

எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறோம். அவ்வூர்களுக்கு நமது வேதனை இரவு நேரத்திலோ, முற்பகலில் அவர்கள் தூங்கும் போதோ வந்து சேர்ந்தது. 7:4.

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.  10:13.

மேற்கானும் திருமறை வசனங்களில் பாவிகள் வாழ்ந்து வந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது அழித்திருக்கின்றோம் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் இவ்வாறு திருமறையில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான் அவ்வாறு சுட்டிக்காட்டும்போது மனிதர்கள் என்றும், பாவிகள் என்றும், அநியாயாக்காரர்கள், குற்றம் செய்யும் ம்ககளுக்கு என்றும் மட்டுமேக் குறிப்பிடுகின்றான் அங்கே சாதி, மதம் குறிப்பிடப்பட வில்லை.
 
இதிலிருந்து அநியாயமும், அட்டூழியமும் தலைவிரித்தாடும் சமுதாயத்தில் அல்லாஹ்வுடைய கோபம் இறங்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்